ஏப்.22 முதல் SALE.. இந்த ரூ.13,499 போனின் ஆர்டர் அடி கொளுத்த போகுது.. என்ன மாடல்?
2025 ஆம் ஆண்டில் ஐக்யூ நிறுவனத்தின் ஆட்டம் "வேற மாதிரி" ஆக இருக்கிறது. ரூ.22,000 பட்ஜெட்டில் 7300mAh பேட்டரி உடன் ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனையும், ரூ.13000 பட்ஜெட்டில் 44W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 6500எம்ஏஎச் பேட்டரி உடனான ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி (iQOO Z10x 5G) ஸ்மார்ட்போனையும் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்து இருந்தது.
ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.13,499 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.14,999 க்கும் மற்றும் டாப்-எண்ட் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.16,499 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
இது அல்ட்ராமரைன் மற்றும் டைட்டானியம் ஆகிய 2 கலர்களில் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா (Amazon.in) மற்றும் ஐக்யூ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளமான ஐக்யூ இந்தியா இஸ்டோர் (iQOO India eStore) வழியாக வாங்க கிடைக்கும்.
ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 6.72-இன்ச் எப்எச்டி பிளஸ் 120ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதன் பஞ்ச்-ஹோல் டிசைனில் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது. ரியர் கேமராவில் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உள்ளது. இது மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் (MediaTek Dimensity 7300 SoC) கொண்டு இயங்குகிறது.
இது பெரிய 6500mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 44W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான பன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கொண்டு இயக்குகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 2 ஆண்டுகள் மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 3 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு
- 2408 × 1080 பிக்சல்ஸ் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1050 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
- மாலி-ஜி615 எம்சி2 ஜிபியு உடனான 2.5GHz வரையிலான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் சிப்செட்
- 6ஜிபி / 8ஜிபி LPDDR4x ரேம், 128ஜிபி / 256ஜிபிசி UFS 3.1 ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான பன்டச்ஓஎஸ் 15
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 2எம்பி டெப்த் சென்சார், - எல்இடி ஃபிளாஷ், 4கே வீடியோ பதிவு ஆதரவு
- எப்/2.05 அபெர்க்ஷர் உடனான 8எம்பி செல்பீ கேமரா
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இன்ப்ராரெட் சென்சார்
- 44W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 6500mAh பேட்டரி
- இராணுவ தர MIL-STD-810H சான்றிதழ்
- ஐபி64 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு திறன்
- 5ஜி (NSA) மற்றும் 4ஜி வோல்ட்இ
- வைஃபை 6 802.11 ax (2.4GHz + 5GHz)
- ப்ளூடூத் 5.4
- ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பெய்டு, யூஎஸ்பி டைப்-சி 2.0
- யூஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- அளவீட்டில் 165.7×76.3×8.09மிமீ
- எடையில் 204 கிராம்.


Click it and Unblock the Notifications








