Amazon குடியரசு தின விற்பனை.. 6500mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் iQOO 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் தற்போது அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026 (Amazon Great Republic Day Sale 2026) எனும் பெயரில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதேபோல் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐக்யூ இஸட்10 5ஜி (iQOO Z10x 5G) போனும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
தற்போது அமேசான் சிறப்பு விற்பனையில் ஐக்யூ இஸட்10 5ஜி போனுக்கு 14 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,998 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை ரூ13,998 விலையில் வாங்கிவிட முடியும்.

ஐக்யூ இஸட்10 5ஜி அம்சங்கள் ( iQOO Z10x 5G Specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் (MediaTek Dimensity 7300 SoC) வசதியுடன் ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயனர்களைக் கவரும் வகையில் மாலி-ஜி615 எம்சி2 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ஐக்யூ ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி உள்ளது.
அதேபோல் 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2408 × 1080 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1050 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்
அதுவும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான பன்டச்ஓஎஸ் 15 மூலம் இந்த ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. பின்பு இந்த போனில் 4K வீடியோ ரெக்கார்டிங் (Video Recording) சப்போர்ட் கிடைக்கிறது.

ஐக்யூ இஸட்10 5ஜி போனில் 5ஜி (NSA), 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ax (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், க்ளோனாஸ், பெய்டு, யூஎஸ்பி டைப்-சி 2.0 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. மேலும் யூஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட வசதிகளும் இந்த போனில் உள்ளன. அல்ட்ராமரைன் மற்றும் டைட்டானியம் ஆகிய 2 கலர்களில் இந்த போனை வாங்க முடியும்.
இந்த போன் இராணுவ தர MIL-STD-810H சான்றிதழ் பெற்றுள்ளது. அதேபோல் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்(Dust & Water Resistant) வசதியும் இந்த போனில் உள்ளது. 6500mAh பேட்டரி உடன் ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








