Home
Mobile

அடிச்சு தூக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5700mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. எந்த மாடல்?

அமேசான் பிளாக் ஃப்ரைடே சேலில் (Amazon Black Friday Sale) தள்ளுபடி போக பட்ஜெட் விலையில் ஐக்யூ ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் பிரைமரி கேமரா, 5700mAh பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட ஐக்யூ இசட்10ஆர் (iQOO Z10R) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது.

இந்த சேலில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலானது 17 சதவீத தள்ளுபடி போக ரூ.19,498 பட்ஜெட்டில் கிடைக்கிறது. மேலும், குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,500 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.17,998 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். பழைய மாடல்களுக்கு ரூ.18,400 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இதற்கு கிடைக்கிறது.

அடிச்சு தூக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. மாடல்?

ஐக்யூ இசட்10ஆர் அம்சங்கள் (iQOO Z10R Specifications): ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் 2 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கிறது. 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுக்கிறது. ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 4nm) சிப்செட் கிடைக்கிறது.

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2392 x 1080 பிக்சல்கள் ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் கொடுக்கும்படி 6.77 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதுவொரு 3டி கர்வ்ட் டிஸ்பிளே மாடல் மட்டுமல்லாமல், குவாட் கர்வ்ட் டிசைன் கொடுக்கிறது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+) டிஸ்பிளே அம்சம் கொடுத்து இருக்கிறது.

கர்வ்ட் டிஸ்பிளேவாக இருப்பதால், SCHOTT Xensation கிளாஸ் பாதுகாப்பு கிடைக்கிறது. 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் செகண்டரி கேமராவுடன் டூயல் ரியர் செட்டப் (Dual Rear Setup) கொண்டுள்ளது. பிரைமரி கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் கிடைக்கிறது. செகண்டரி கேமராவில் கேலக்ஸிகோர் ஜிசி02எம்1 (Galaxycore GC02M1) உள்ளது.

இசட் சீரிஸ் மாடல்களில் கிடைப்பதை போலவே ஆரா லைட் (Aura Light) இந்த ஐக்யூ இசட்10ஆர் ஸ்மார்ட்போனுக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 4K ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கிடைக்கிறது.கேலக்ஸிகோர் ஜிசி32ஈ1 (Galaxycore GC32E1) சென்சாருடன் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொடுக்கப்படுகிறது. இதிலும் 4K ரெசொலூஷன் ரெக்கார்டிங் வருகிறது.

டிஸ்பிளேவுக்கு கிடைத்த பாதுகாப்பு போக மொத்தமாகவே எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) தரம் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி (Military Grade Durability) கிடைக்கிறது. மேலும், IP68 மற்றும் IP69 ரேட்டிங்ஸ் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட்டை இந்த ஐக்யூ இசட்10ஆர் ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது. ஆகவே, குவாலிட்டி பிரீமியமாக இருக்கும்.

44W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5700mAh பேட்டரியை இந்த ஐக்யூ இசட்10ஆர் ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இந்த பேட்டரியை கொடுத்தும் 7.39 மிமீ தடிமனில் பக்கா ஸ்லிம் லுக் கொடுக்கிறது. மேலும், 183.5 கிராம் எடையை மட்டுமே கொண்டுள்ளது. ஆகவே, லைட் வெயிட் மற்றும் ஸ்லிம் பாடி எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு பக்கா மாடலாக இருக்கிறது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை (Stereo Speakers) கொடுத்துள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ, வை-பை 6 மற்றும் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டி உள்ளது. அக்வாமரைன் மற்றும் மூன்ஸ்டோன் கலர்களில் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z10R With 50MP Camera Available Under Rs 18000 in Amazon Black Friday Sale 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X