Home
Mobile

வந்துட்டான்யா.. வந்துட்டான்.. IP69 ரேட்டிங்.. 5700mAh பேட்டரி.. புதிய iQOO போன் அறிமுகம்.. எந்த மாடல்?

ஐக்யூ நிறுவனம் தனது புதிய ஐக்யூ இசட்10ஆர் (iQOO Z10R) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஐபி69 ரேட்டிங், 5700எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய ஐக்யூ போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஐக்யூ இசட்10ஆர் அம்சங்கள் (iQOO Z10R specifications): 6.77-இன்ச் ஃபுல் எச்டி குவாட் கர்வ்ட் அமோலெட் (quad-curved AMOLED)டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1800 பீக் நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

வந்துட்டான்யா.. வந்துட்டான்.. புதிய iQOO போன் அறிமுகம்.. எந்த மாடல்?

தரமான ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 4nm)சிப்செட் வசதியுடன் இந்த ஐக்யூ இசட்10ஆர் போன் வெளிவந்துள்ளது. மேலும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு(Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் + 2எம்பி செகண்டரி சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ இசட்10ஆர் ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் மூலம 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor) வசதியுடன் இந்த புதிய ஐக்யூ இசட்10ஆர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட பல அசத்தலான வசதிகள் இந்த போனில் உள்ளன.

IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் ஐக்யூ இசட்10ஆர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஐக்யூ இசட்10ஆர் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

5700mAh பேட்டரி உடன் ஐக்யூ இசட்10ஆர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன.

வந்துட்டான்யா.. வந்துட்டான்.. புதிய iQOO போன் அறிமுகம்.. எந்த மாடல்?

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ இசட்10ஆர் போனின் விலை ரூ.19,499-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.21,499 விலையிலும், 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.23,499 விலையிலும் வாங்க முடியும். அக்வாமரைன் மற்றும் மூன்ஸ்டோன் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

வரும் ஜூலை 29-ம் தேதி முதல் அமேசான் மற்றும் iQOO eStore மூலம் இந்த போனை வாங்க முடியும். அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z10R smartphone launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X