ஜூலை 24 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 50எம்பி கேமரா.. இந்தியாவுக்கு வரும் புதிய iQOO போன்.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனம் தனது ஐக்யூ இசட்10ஆர் (iQOO Z10R) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய போன் வரும் ஜூலை 24-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய ஐக்யூ இசட்10ஆர் ஸ்மார்ட்போன் ஆனது அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும்.
அதுவும் ஐக்யூ இசட்10ஆர் போன் ஆனது அமேசான் தளத்தில விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த புதிய ஐக்யூ இசட்10ஆர் ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகாப் பார்க்கலாம்.

ஐக்யூ இசட்10ஆர் அம்சங்கள் (iQOO Z10R specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7400 எஸ்ஒசி ((MediaTek Dimensity 7400 SoC) சிப்செட் உடன் இந்த புதிய ஐக்யூ இசட்10ஆர் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த டைமன்சிட்டி சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
அதேபோல் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) மூலம் இந்த ஐக்யூ இசட்10ஆர் ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக ஐக்யூ இசட்10ஆர் போனின் வடிவமைப்பு மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஐக்யூ நிறுவனம்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஐக்யூ இசட்10ஆர் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
ஆரா லைட் (Aura light) ஆதரவு கொண்ட 50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஐக்யூ இசட்10ஆர் போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
6000mAh பேட்டரி வசதியுடன் ஐக்யூ இசட்10ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி ஐக்யூ இசட்10ஆர் ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் அக்வாமரைன் (Aquamarine) மற்றும் மூன்ஸ்டோன் (Moonstone) நிறங்களில் இந்த போன் வெளிவரும். அதேபோல் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (னுரளவ ரூ றுயவநச சுநளளைவயவெ) ஆதரவுடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ஐக்யூ இசட்10ஆர் ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் விலைக்கு தகுந்த அம்சங்கள் இந்த ஐக்யூ போனில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








