Home
Mobile

ஆரம்பமே ஆஃபர்.. இன்று விற்பனைக்கு வரும் புதிய iQOO போன்.. எந்த மாடல்? என்ன விலை?

கடந்த வாரம் இந்தியாவில் ஐக்யூ இசட்10ஆர் (iQOO Z10R) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த புதிய ஐக்யூ இசட்10ஆர் போனின் முதல் விற்பனை அமேசான் மற்றும் iQOO eStore தளங்களில் இன்று மதியம் 12 மணி அளவில் தொடங்குகிறது. இப்போது இந்த போனின் விலை, சலுகைள் மற்றும் அம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம்..

ஐக்யூ இசட்10ஆர் விலை: 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ இசட்10ஆர் போனின் விலை ரூ.19,499-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.21,499 விலையிலும்,12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.23,499 விலையிலும் வாங்க முடியும்.

ஆரம்பமே ஆஃபர்.. இன்று விற்பனைக்கு வரும் புதிய iQOO போன்.. எந்த மாடல்?

ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும். எனவே இந்த போனை சற்று குறைவான விலையில் வாங்கிவிட முடியும். அக்வாமரைன் மற்றும் மூன்ஸ்டோன் நிறங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.

ஐக்யூ இசட்10ஆர் அம்சங்கள் (iQOO Z10R specifications): சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 4nm)சிப்செட் வசதியுடன் இந்த ஐக்யூ இசட்10ஆர் போன் வெளிவந்துள்ளது. மேலும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு(Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

6.77-இன்ச் ஃபுல் எச்டி குவாட் கர்வ்ட் அமோலெட் (quad-curved AMOLED) டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1800 பீக் நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

இந்த ஐக்யூ இசட்10ஆர் ஸ்மார்ட்போன் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் + 2எம்பி செகண்டரி சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

குறிப்பாக இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor) வசதியுடன் இந்த புதிய ஐக்யூ இசட்10ஆர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட பல அசத்தலான வசதிகள் இந்த போனில் உள்ளன.

ஆரம்பமே ஆஃபர்.. இன்று விற்பனைக்கு வரும் புதிய iQOO போன்.. எந்த மாடல்?

IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் ஐக்யூ இசட்10ஆர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஐக்யூ இசட்10ஆர் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

அதுவும் 5700mAh பேட்டரி உடன் ஐக்யூ இசட்10ஆர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z10R goes on sale in India for the first time today: Check Out Deals, Discounts, Offers, Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X