பொளந்து கட்டும் அமேசான்.. கம்மி பட்ஜெட்ல சோனி கேமரா.. 5700mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
ஐக்யூ இசட்10ஆர் 5ஜி (iQOO Z10R 5G) ஸ்மார்ட்போன் தற்போது அமேசான் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. டைமன்சிட்டி சிப்செட், ஐபி69 ரேட்டிங், 5700எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அதாவது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ இசட்10ஆர் 5ஜி போனுக்கு 17 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,498 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது, எனவே இந்த போனை ரூ.18,498 விலையில் வாங்கிவிட முடியும்.

ஐக்யூ இசட்10ஆர் 5ஜி அம்சங்கள் (iQOO Z10R 5G specifications): சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 4nm)சிப்செட் வசதியுடன் இந்த ஐக்யூ இசட்10ஆர் 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு(Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
குறிப்பாக 6.77-இன்ச் ஃபுல் எச்டி குவாட் கர்வ்ட் அமோலெட் (quad-curved AMOLED) டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1800 பீக் நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
அதுவும் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் ஐக்யூ இசட்10ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஐக்யூ இசட்10ஆர் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
இந்த ஐக்யூ இசட்10ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் + 2எம்பி செகண்டரி சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போன் மூலம 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதேபோல் 5700mAh பேட்டரி உடன் ஐக்யூ இசட்10ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன.
மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor) வசதியுடன் இந்த புதிய ஐக்யூ இசட்10ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட பல அசத்தலான வசதிகள் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








