Home
Mobile

அதிரவிட்ட அமேசான்.. IP69 ரேட்டிங்.. சோனி கேமரா.. ஆஃபரில் iQOO 5ஜி போன்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் சம்மர் சேல் (amazon great summer sale 2026 ) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அதேபோல் ஐக்யூ நிறுவனத்தின் 5ஜி போன் ஒன்று தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இதுகுறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது அமேசான் சிறப்பு விற்பனையில் ஐக்யூ இசட்10ஆர் 5ஜி (iQOO Z10R 5G)போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.22,998 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

அதிரவிட்ட அமேசான்.. ஆஃபரில் iQOO 5ஜி போன்.. எந்த மாடல்?

ஐக்யூ க்யூ இசட்10ஆர் 5ஜி அம்சங்கள் (iQOO Z10R 5G specifications): ஐக்யூ இசட்10ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் + 2எம்பி செகண்டரி சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

குறிப்பாக 6.77-இன்ச் ஃபுல் எச்டி குவாட் கர்வ்ட் அமோலெட் (quad-curved AMOLED) டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இசட்10ஆர் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1800 பீக் நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் ஐக்யூ இசட்10ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் இந்த புதிய ஐக்யூ இசட்10ஆர் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor) வசதியுடன் இந்த புதிய ஐக்யூ இசட்10ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட பல அசத்தலான வசதிகள் இந்த போனில் உள்ளன.

தரமான ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 4nm) சிப்செட் வசதியுடன் இந்த ஐக்யூ இசட்10ஆர் 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

அதேபோல் 5700mAh பேட்டரி உடன் ஐக்யூ இசட்10ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஐக்யூ போனில் உள்ளன.

Best Mobiles in India

English summary
iQOO Z10R 5G available at discounted price during Amazon Great Summer sale: Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X