விலை இவ்ளோ தானா.. அள்ளி வீசுவாங்களே.. புது iQOO போன்.. 7300mAh பேட்டரி, 90W சார்ஜிங், SD 7எஸ் ஜென் 3!
2025 ஏப்ரல் 11 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் சிப்செட் மற்றும் விலை நிர்ணயம் குறித்த விவரங்கள் - ஐக்யூ நிறுவனத்தின் லேட்டஸ்ட் டீஸர் ஒன்றின் வழியாக - உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஆன ஐக்யூ நிறுவனமானது அதன் ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு நாள் "நெருங்க நெருங்க" பல முக்கிய அம்சங்கள் மற்றும் விவரங்களை ஒவ்வொன்றாக வெளிப்படுத்தி வருகிறது. அப்படியாக தற்போது ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் சிப்செட் மற்றும் விலை நிர்ணயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

முந்தைய டீஸர்களின் வழியாக, இந்த ஸ்மார்ட்போனில் 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் ஒரு பெரிய 7,300mAh பேட்டரி பேக் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இப்போது, ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7s Gen 3 SoC) உடன் வரும் என்பது உறுதிசெய்யபட்டுள்ளது.
மேலும் ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.22,000 க்கும் குறைவான விலைக்கு அறிமுகம் ஆகும் என்கிற தகவலும் கிடைத்துள்ளது. நல்ல சிப்செட், மிகப்பெரிய பேட்டரி, ஈர்க்கக்கூடிய சார்ஜிங் ஸ்பீட் மற்றும் குவாட் கர்வ்டு AMOLED டிஸ்பிளே ஆகியவற்றைப் பெறுவதால் - ரூ.22,000 க்குள் என்கிற விலை நிர்ணயம் நிச்சயம் ஒரு சிறந்த டீல் ஆக அமையும்
ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.21,999 க்கு அறிமுகமாக வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் ஹை-எண்ட் ஆப்ஷன்களும் (சற்று அதிக விலைக்கு) அறிமுகமாகும். இது ஸ்டெல்லர் பிளாக் மற்றும் கிளேசியர் சில்வர் என இரண்டு கலர் ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தப்படுவம்து உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனுடன் சேர்ந்து ஐக்யூ இஸட்10 டர்போ (iQOO Z10 Turbo) அல்லது ஐக்யூ இஸட்10 டர்போ ப்ரோ (iQOO Z10 Turbo Pro) மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்யூ இஸட்10 டர்போ மற்றும் ஐக்யூ இஸட்10 டர்போ ப்ரோ என்னென்ன அம்சங்களை பேக் செய்யலாம்? என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்?
ஐக்யூ இஸட்10 டர்போ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 1.5K ரெசல்யூஷன் உடனான 6.78-இன்ச் பிளாட் OLED LTPS டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 8400 சிப்செட்
- 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமராவுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- முன்னரே குறிப்பிட்டபடி 7000mAh பேட்டரி
- 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- ஷார்ட்-ஃபோகஸ் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- விலை ரூ.40,000 க்குள் (ரூ.39,990) இருக்கலாம்.
ஐக்யூ இஸட்10 டர்போ ப்ரோவில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- LTPS பேக்லைட்டிங் உடன் கூடிய 6.78-இன்ச் 1.5கே டிஸ்பிளே
- பிளாஸ்டிக் மிட்-ஃபிரேம் டிசைன்
- குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8எஸ் எலைட் சிப்செட்
- அட்ரினோ 825 ஜிபியு
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- 12ஜிபி ரேம்
- 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 7000mAh பேட்டரி
- ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
ஐக்யூ இஸட்10 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? இது ரூ.44,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் இது முதலில் சீன சந்தையில் தான் அறிமுகம் செய்யப்படும். அதாவது ஏப்ரல் 11 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனுடன் சேர்ந்து இது அறிமுகம் செய்யப்பட வாய்ப்பில்லை.


Click it and Unblock the Notifications








