Home
Mobile

பெரிய சம்பவம் சார் இது.. பட்ஜெட்ல 7300mAh பேட்டரி.. SONY கேமரா.. QUAD டிஸ்பிளே... 90W சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டே மூக்கில் விரல் வைக்கும்படி 7300mAh பேட்டரியுடன் ஐக்யூ இசட்10 (iQOO Z10) வெளியாக இருக்கிறது. இதுவரையில் 6500mAh பேட்டரி கொண்ட விவோ டி4எக்ஸ் (Vivo T4x) மட்டுமே அதிக கேபாசிட்டி கொண்ட மாடலாக இருந்தது. இந்த மாடலை தூக்கி சாப்பிடும்படி இந்த ஐக்யூ இசட்10 களமிறங்க இருக்கிறது. இதன் வெளியீட்டு தேதியை ஐக்யூ நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதோடு டிஸ்பிளே, கேமரா, ரேம், சிப்செட் மற்றும் டிசைன் போன்ற பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன.

ஏப்ரல் 11ஆம் தேதி இந்திய மார்கெட்டில் இந்த போன் வெளியாக இருக்கிறது. 7300mAh பேட்டரி கிடைப்பதும், குவாட் கர்வ்ட் டிஸ்பிளே மற்றும் டூயல் ரியர் கேமரா டிசைனும் அதிகாரப்பூர்வமாக உறுதியாகிவிட்டன. ஆனால், மற்ற பீச்சர்கள் வெளியாகவில்லை. ஆனால், ஸ்மார்ட்பிக்ஸ் (Smartprix) தளத்தில் மார்கெட்டில் கசிந்த பீச்சர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

பெரிய சம்பவம் சார் இது.. பட்ஜெட்ல 7300mAh பேட்டரி.. SONY கேமரா மாடல்!

ஐக்யூ இசட்10 அம்சங்கள் (iQOO Z10 Specifications): இப்போது பார்க்க இருக்கும் பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ளதால், கிட்டத்தட்ட இடம்பெற வாய்ப்புகள் இருக்கிறது. இந்த ஐக்யூ போனில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.67 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது.

குவாட்-கர்வ்ட் டிசைனில் (Quad-curved Design) 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கிறது. 7300mAh பேட்டரி மட்டுமல்லாமல், 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்க இருக்கிறது. இந்த ஐக்யூ இசட்10 போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வெளியாக இருக்கின்றன. மிட்-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி சிப்செட் கிடைக்கிறது.

ஆகவே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 எஸ்ஓசி (Qualcomm Snapdragon 7s Gen 3 SoC) கிடைக்க இருக்கிறது. அப்கம்மிங் மாடலாக இருப்பதால், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) வருவது உறுதியாக சொல்லலாம். அதேபோல ஐக்யூ மாடல்களில் அதிகமாக கிடைக்கும் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கிடைக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. டூயல் ரியர் கேமரா கிடைக்கிறது.

சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்க இருக்கிறது. ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) கிடைக்கிறது. 7300mAh பேட்டரி இருப்பதாலும் 8.1 எம்எம் தடிமன் மட்டுமே கொடுக்கிறது.

மேற்கண்ட பீச்சர்கள் மட்டுமே மார்கெட்டில் கசிந்துள்ளன. இந்த பீச்சர்களை பார்க்கும்போது, இந்த ஐக்யூ இசட்10 போன் ரூ.25,000 பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. இது ஆரம்ப விலை மாடலாக இருக்கும். ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாக இருப்பதால், அடுத்தடுத்த பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாகவே வெளியாகும். அப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த மாடலுடன் ஐக்யூ இசட்10 டர்போ (iQOO Z10 Turbo) போனும் ஏப்ரல் மாததத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இந்திய மார்கெட் என்று தகவல்கள் சொல்லவில்லை. இருப்பினும், இந்த போனில் 7500mAh பேட்டரி வர இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதால், தனி கவனம் பெற்றுள்ளது. இந்த போனின் கசிந்த பீச்சர்களை இப்போது பார்ப்போம்.

Take a Poll

இந்த ஐக்யூ இசட்10 டர்போ 6.78 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் வர இருக்கிறது. டைமன்சிட்டி 8400 (Dimensity 8400) சிப்செட் மற்றும் 7500 பேட்டரி கிடைக்கிறது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங், சோனி சென்சார் மெயின் கேமரா மற்றும் 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்க இருக்கிறது. இந்த போனின் வெளியீடு உறுதி செய்யப்படவில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z10 With 7300mAh Battery India Launch on April 11 Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X