தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.19,999 பட்ஜெட்ல 7300mAh பேட்டரி.. SONY கேமரா.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த போன்?
இந்தியாவில் அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடலாக ஐக்யூ இசட்10 (iQOO Z10) வெளியாக இருக்கிறது. ஏப்ரல் 11ஆம் தேதி களமிறங்க இருக்கும் இந்த போனில் 7300mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங், குவாட் கர்வ்ட் டிஸ்பிளே, பிரீமியம் கலர், அல்ட்ரா ஸ்லிம் பாடி போன்றவை வர இருக்கின்றன. இந்த நேரத்தில் விலை விவரங்கள் மார்கெட்டில் கசிந்து ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்றுள்ளது. இந்த ஐக்யூ இசட்10 போனின் பீச்சர்கள், விலை, விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாக இருப்பதால், அடுத்தடுத்து பீச்சர்கள் கசிந்து வருகின்றன. இப்போது, விலை விவரங்களும் கசிந்துவிட்டன. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி இருக்கிறது. 12 ஜிபி ரேம் கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட் கிடைக்க இருக்கிறது.

இதில் 8 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.21,999 ஆரம்ப விலையில் வெளியாக இருக்கிறது. ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.19,999 பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது. இந்த விலை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், நம்ப தகுந்த வட்டாரங்களில் கசிந்துள்ளதால், அதே பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புகள் அதிகமாகும்.
முன்பே சொன்னதை போல 7300mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் குவாட் கர்வ்ட் டிஸ்பிளே (Quad Cuverd Display) பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதேபோல 7300mAh பேட்டரி இருந்தும் 7.89 எம்எம் தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் வெளியாக இருப்பதும் உறுதியாகி இருக்கிறது. கிளாசியர் சில்வர் (Glacier Silve) கலர் உள்ளது.
அதேபோல ஸ்டெல்லர் பிளாக் (Stellar Black) கலரிலும் கிடைக்க இருக்கிறது. சொல்லப்போனால், இந்த ஐகியூ இசட்10 போனானது, மார்ச் 31ஆம் தேதி சீனாவில் வெளியாக இருக்கும் விவோ ஒய்300பிளஸ் (Vivo X300 Pro+) போனின் ரீபிராண்ட் வெர்ஷனாக இருக்க போகிறது. ஏனென்றால், டிசைன் மற்றும் பீச்சர்கள் ஒரே மாதிரியாக இருக்கின்றன.

இதனால் மார்ச் 31ஆம் தேதி அந்த போன் வெளியான பிறகு இந்த போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள குறித்து தெரியவந்துவிடும். இதனால் விவோ ஒய்300பிளஸ் போனின் வெளியீட்டுக்கும் மிகப்பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது. சரி, இப்போது ஐக்யூ இசட்10 போனின் கசிந்த பீச்சர்களை தெரிந்து கொள்வோம்.
ஐக்யூ இசட்10 அம்சங்கள் (iQOO Z10 Specifications): இந்த போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 எஸ்ஓசி (Qualcomm Snapdragon 7s Gen 3 SoC) சிப்செட் கிடைக்க இருக்கிறது. 6.67 இன்ச் குவாட் கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது.
இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1.5K ரெசொலூஷன் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமராவானது, சோனி எல்ஒய்டி600 (Sony LYT600) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) கிடைக்கிறது. 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்க இருக்கிறது.
டூயல் ஸ்பீக்கர்கள், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் கிடைக்க இருக்கிறது. கேமிங் பிரியர்களுக்கான பீச்சர்கள் மற்றும் கேமரா பிரியர்களுக்கான ஏஐ பீச்சர்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டைவிட கம்மியா விலைக்கு அதிக பேக்கப் மட்டுமல்லாமல், மிட்-ரேஞ்ச் பீச்சர்களை எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு இது பக்கா ஆப்ஷனாகும்.


Click it and Unblock the Notifications








