பின்றானே இவன்.. ரூ.21,015 பட்ஜெட்ல 7620mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஐக்யூ பிரியர்களே நம்ப முடியாத பட்ஜெட்டில் 7620mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் ஐக்யூ இசட்10 டர்போ (iQOO Z10 Turbo) போன் வெளியாகி இருக்கிறது. டைமன்சிட்டி 8400 சிப்செட்டுடன் மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் இந்த ஐக்யூ இசட்10 டர்போ போனின் முழு பீச்சர்கள் என்னென்ன? விலை எப்படி? உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஐக்யூ இசட்10 டர்போ போன் சீன மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. அடிமட்ட விலைக்கு விற்பனைக்கும் வந்துவிட்டது. இதே பட்ஜெட்டில் இந்தியா உள்பட மற்ற நாடுகளிலும் விலை நிர்ணயம் இருக்க வாய்ப்புள்ளதால், மிகப்பெரும் கவனம் பெற்றுள்ளது. ஏனென்றால், ரூ.21,000 பட்ஜெட்டில் ஆரம்ப விலை இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் நம்ப முடியாத பீச்சர்களும் இருக்கின்றன.

ஐக்யூ இசட்10 டர்போ அம்சங்கள் (iQOO Z10 Turbo Specifications): இந்த ஐக்யூ போனில் பட்ஜெட்டிலும் மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8400 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8400 4nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஓர்ஜின் ஓஎஸ் 15 (Origin OS 15) + மாலி ஜி720 ஜிபியு (Mali G720 GPU) கிராபிக்ஸ் கிடைக்கிறது.
இந்த சிப்செட்டுக்கு ஏற்ப நான்கு ரேம் மற்றும் மெமரி வேரியண்ட்கள் வெளியாகி இருக்கின்றன. ஆகவே, ஐக்யூ இசட்10 டர்போ போனில்12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 256 மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 4 வேரியண்ட்கள் கிடைக்கின்றன. 4400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.78 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது.
இந்த டிஸ்பிளேவில் கேமிங் பிரியர்கள் எதிர்பார்க்கும்படி 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. இதுபோக கேமிங்கின்போது 3000Hz வரையில் டச் சாம்பிளிங் ரேட் பெற்று கொள்ளலாம். மேலும், அடாப்டிவ் கலர் டெம்ரேச்சர் சென்சார், லோவ் ஃபிளிக்கர் ப்ரீ, 4320Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் டிசி டிம்மிங் (DC Dimming) சப்போர்ட் கிடைக்கிறது.

கேமிங்குக்காக கியூ1 சிப் மற்றும் மான்ஸ்டர்பிளஸ் மோட் (Monster+ Mode) கிடைக்கிறது. இதன் மூலம் லோவ்-லேட்டன்சி, ஹை-ரெசொலூஷன் போன்றவை என்ஹான்ஸ் செய்யப்படும். இதுபோக விசி கூலிங் சிஸ்டம் (VC Liquid Cooling) கிடைக்கிறது. இதற்கு ஏற்ப பேக்கப் கொடுக்கும்படி 7620mAh ப்ளூ ஓசன் பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 90W ஃபிளாஷ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.
இவ்வளவு பெரிய பேட்டரியை வெறும் 55 நிமிடங்களில் சார்ஜ் செய்து கொள்ளலாம். எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார், இன்பிராரெட் ரிமோட் கன்ட்ரோல் மற்றும் ஃபுல் பீச்சர்டு என்எப்சி சப்போர்ட் கிடைக்கிறது. அடாமிக் ஐலோண்ட், டீப்-சீக் அசிஸ்டன்ட், ஏஐ ஐடி போட்டோ போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. 50 எம்பி மெயின் + 2 எம்பி டெப்த் மற்றும் 16 எம்பி செல்பீ கிடைக்கிறது.
ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், சோனி எல்ஒய்டி 600 சென்சார் கிடைக்கிறது. இந்த ஐக்யூ போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை 1799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.21,011) ஆக இருக்கிறது. அதேபோல 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை 2399 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.28,020) ஆக இருக்கிறது. இங்கும் இதே விலைக்கு வரலாம்.


Click it and Unblock the Notifications








