Home
Mobile

அடுத்த iQOO போன் ரெடி.. 7000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஐக்யூ நிறுவனம் புதிய ஐக்யூ இசட்10 டர்போ ப்ரோ ( iQOO Z10 Turbo) ஸ்மார்ட்போனை வரும் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் தான் அறிமுகமாகும். அதன்பின்பு தான் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த ஐக்யூ இசட்10 டர்போ ப்ரோ போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

ஐக்யூ இசட்10 டர்போ ப்ரோ அம்சங்கள் (iQOO Z10 Turbo Specifications): 6.79-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஐக்யூ இசட்10 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி இதில் உள்ளது.

அடுத்த iQOO போன் ரெடி.. 7000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

ஸ்னாப்டிராகன் 8எஸ் எலைட் எஸ்ஒசி (Snapdragon 8s Elite SoC) சிப்செட் வசதியுடன் இந்த புதிய ஐக்யூ இசட்10 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் எனவே இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ள சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஐக்யூ இசட்10 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி ஐஎக்ஸ்882 மெயின் கேமரா (IMX882 main sensor)உடன் இந்த ஐக்யூ இசட்10 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

7000mAh பேட்டரி வசதியுடன் ஐக்யூ இசட்10 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant)உடன் ஐக்யூ இசட்10 டர்போ ப்ரோ அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த போனில் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்(Stereo speakers) ஆதரவு உள்ளன. குறிப்பாக இந்த ஐக்யூ இசட்10 டர்போ ப்ரோ போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தி உள்ளது ஐக்யூ நிறுவனம்.

5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஐக்யூ இசட்10 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் ஐக்யூ இசட்10 டர்போ ப்ரோ ஆனது சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும். ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z10 Turbo specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X