வெச்சி செஞ்சிட்டாங்க.. பட்ஜெட்ல 144Hz டிஸ்பிளே.. 120W சார்ஜிங்.. 7000mAh பேட்டரி.. SONY கேமரா.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் மூக்கில் விரல் வைக்கும்படியான பட்ஜெட்டில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி, சோனி சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா 16 ஜிபி ரேம் மற்றும் IP65 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் போன்ற பீச்சர்களுடன் ஐக்யூ இசட்10 டர்போ ப்ரோ (iQOO Z10 Turbo Pro) போன் களமிறங்கி இருக்கிறது. இந்த ஐக்யூ போனின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஐக்யூ இசட்10 டர்போ ப்ரோ அம்சங்கள் (iQOO Z10 Turbo Pro Specifications): இந்த டர்போ போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (4nm Octa Core Snapdragon 8s Gen 4) சிப்செட் கிடைக்கிறது. இதுபோக லேட்டஸ்ட் ஓர்ஜின் ஓஎஸ் 15 (Origin OS 15) மற்றும் கேமிங் பிரியர்கள் விரும்பும்படி அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிடைக்கிறது.

டிஸ்பிளேவில் மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது. ஏனென்றால், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கொண்ட 6.78 இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 360Hz டச் சாம்பிளிங் ரேட், 4400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 4320Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.
IP65 ரேட்டிங் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. இதுபோக மிலிட்டரி கிரேடு ஷாக் மற்றும் ட்ராப் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது. இந்த டர்போ போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 256 மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. இதுபோக 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட் கிடைக்கிறது.
சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ஷூட் சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. இந்த ஐக்யூ டர்போ மாடலில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. விசி கூலிங் சிஸ்டம், பேட்டரி டெக்னாலஜிகளுடன் 7000mAh பேட்டரி கிடைக்கிறது.

இந்த பேட்டரிக்கு 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. பர்னிங் ஆரஞ்ச், டெசர்ட் கிரே, ஸ்டார்ரி ஸ்கை பிளாக் மற்றும் சீ கிளவுட் ஒயிட் ஆகிய 4 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன. இவ்வளவு பீச்சர்களை கொண்டிருந்தும், விலை பட்ஜெட்டில் பேக் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.23,348ஆக இருக்கிறது.
16 ஜிபி ரேம் + 256 மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.25,688 ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.28,024 ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.30,364 ஆகவும் இருக்கிறது. இந்த விலையில் சீன மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. இதே பட்ஜெட்டில் குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








