Home
Mobile

கலக்குறே iQOO.. 7000mAh பேட்டரி, 120W சார்ஜிங், Snapdragon 8s Elite சிப், 12GB ரேம்.. இன்னொரு புது போன்!

ஐக்யூ நிறுவனம் பேக் டூ பேக் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது. "ப்பா என்னவொரு காம்பினேஷன்ப்பா!" என்று கூறும் அளவிற்கு 7000mAh பேட்டரி, 12GB ரேம், 90W சார்ஜிங் ஆகிய முக்கிய அம்சங்களுடன் ஐக்யூ இஸட்10 டர்போ அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவல் வெளியான வேகத்தில் இன்னொரு புதிய ஐக்யூ மாடலின் அறிமுகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அது ஐக்யூ இஸட்10 டர்போ ப்ரோ (iQOO Z10 Turbo Pro) ஸ்மார்ட்போனாகும். இதுவும் 7000mAh பேட்டரி உட்பட சில சிறப்பான அம்சங்களுடன் வரும் என்பதை சீனாவின் 3சி சான்றிதழ் தளம் வெளிப்படுத்தியுள்ளது. ஐக்யூ இஸட்10 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன் அப்படி என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? ஏப்ரல் 11 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் ஐக்யூ இஸட்10 5ஜி (iQOO Z10 5G) ஸ்மார்ட்போனுடன் சேர்ந்து இது அறிமுகம் ஆகுமா? இதோ விவரங்கள்:

கலக்குறே iQOO.. 7000mAh பேட்டரி உடன் இன்னொரு புது போன்!

ஐக்யூ இஸட்10 டர்போ ப்ரோவில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் (iQOO Z10 Turbo Pro Specifications Expected)?
- LTPS பேக்லைட்டிங் உடன் கூடிய 6.78-இன்ச் 1.5கே டிஸ்பிளே
- பிளாஸ்டிக் மிட்-ஃபிரேம் டிசைன்
- குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8எஸ் எலைட் சிப்செட்
- அட்ரினோ 825 ஜிபியு
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- 12ஜிபி ரேம்
- 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 7000mAh பேட்டரி
- ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்

ஐக்யூ இஸட்10 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம் (iQOO Z10 Turbo Pro Price Expected)? இது ரூ.44,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் இது முதலில் சீன சந்தையில் தான் அறிமுகம் செய்யப்படும். அதாவது ஏப்ரல் 11 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனுடன் சேர்ந்து இது அறிமுகம் செய்யப்பட வாய்ப்பில்லை.

ஆனால் நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான பராஸ் குக்லானி (PassionateGeekz) வழியாக கிடைத்த தகவலின்படி, ஐக்யூ நிறுவனம் கூடிய விரைவில் அதன் ஐக்யூ இஸட்10 டர்போ (iQOO Z10 Turbo) வெர்ஷனையும் இந்தியாவில் அறிமுகப்படுத்தக்கூடும். இது 8GB அல்லது 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் கோல்ட் மற்றும் சில்வர் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. எல்லாவற்றை விட முக்கியமான இது 7000mAh என்கிற பெரிய அளவிலான பேட்டரியை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆக ஏப்ரல் 11 இல் ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமான பின்னர், ஐக்யூ இஸட்10 டர்போ, ஐக்யூ இஸட்10 டர்போ ப்ரோ ஆகிய மாடல்கள் சீனாவில் அறிமுகமாகி. பின்னர் மற்ற சந்தைகளுக்கு வர அதிக வாய்ப்புள்ளது.

ஐக்யூ இஸட்10 டர்போ ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் (iQOO Z10 Turbo Price and Specifications Expected)?
- 1.5K ரெசல்யூஷன் உடனான 6.78-இன்ச் பிளாட் OLED LTPS டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 8400 சிப்செட்
- 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமராவுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- முன்னரே குறிப்பிட்டபடி 7000mAh பேட்டரி
- 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- ஷார்ட்-ஃபோகஸ் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- விலை ரூ.40,000 க்குள் (ரூ.39,990) இருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z10 Turbo Pro With 120W Charging May Launch After iQOO Z10 5G India Launch on April 11
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X