Home
Mobile

செல்லமே எப்படியாவது சீக்கிரம் வந்திடு.. 7500mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. ஒஎல்இடி டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஐக்யூ நிறுவனம் தனது புதிய ஐக்யூ இசட்10 டர்போ ப்ரோ (iQOO Z10 Turbo Pro) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் முதலில் சீனாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் இந்த போன் அறிமுகமாகும். இந்நிலையில் ஐக்யூ இசட்10 டர்போ ப்ரோ போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அந்த அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

ஐக்யூ இசட்10 டர்போ ப்ரோ அம்சங்கள் (iQOO Z10 Turbo Pro Specifications): 7500mAh பேட்டரி உடன் ஐக்யூ இசட்10 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனை நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் தரும். மேலும் இந்த பேட்டரிரை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

செல்லமே எப்படியாவது  சீக்கிரம் வந்திடு.. 7500mAh பேட்டரி.. எந்த மாடல்?

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் எலைட் (Snapdragon 8s Elite) சிப்செட் உடன் ஐக்யூ இசட்10 டர்போ ப்ரோ அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஒஎல்இடி டிஸ்பிளே, ட்ரிபிள் ரியர் கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஐக்யூ இசட்10 டர்போ ப்ரோ போன் அறிமுகமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது ஐக்யூ இசட்10 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விரைவில் இந்தியாவில் ஐக்யூ நியோ 10ஆர் (iQOO Neo 10R) போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஐக்யூ நியோ 10ஆர் போனின் அம்சங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஐக்யூ நியோ 10ஆர் அம்சங்கள் (iQOO Neo 10R Specifications): ஐக்யூ நியோ 10ஆர் ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Qualcomm Snapdragon 8s Gen 3) சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

இந்த ஐக்யூ நியோ 10ஆர் ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) உடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்று சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. லூனார் டைட்டானியம் (Lunar Titanium) மற்றும் ப்ளூ ஒயிட் ஸ்லைஸ் (Blue White Slice) நிறங்களில் இந்த புதிய போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி மெமரி + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ஐக்யூ நியோ 10ஆர் போனை வாங்க முடியும் என்று கூறப்படுகிறது. பின்பு இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் தரமான ஆடியோ அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும்.

செல்லமே எப்படியாவது  சீக்கிரம் வந்திடு.. 7500mAh பேட்டரி.. எந்த மாடல்?

குறிப்பாக 50எம்பி சோனி எல்ஒய்டி-600 பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஐக்யூ நியோ 10ஆர் போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6400mAh பேட்டரி உடன் இந்த ஐக்யூ நியோ 10ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, வைஃபை, ஜிபியுஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. இந்தியாவில் ரூ.30,000 பட்ஜெட்டில் இந்த புதிய ஐக்யூ நியோ 10ஆர் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z10 Turbo Pro specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X