Home
Mobile

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. 8000mAh பேட்டரியுடன் ஆக.7-க்கு வருது.. டைமன்சிட்டி 9400+ சிப்செட் மாடல்!

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளும்படி 8000mAh பேட்டரி கொண்ட மாடலாக ஐக்யூ இசட்10 டர்போ ப்ரோ பிளஸ் (iQOO Z10 Turbo Pro+) வெளியாக இருக்கிறது. இதுபோக டைமன்சிட்டி 9400+ சிப்செட் கொடுக்க இருக்கிறது. இப்போது, வெளியீட்டு தேதி உறுதியாகி இருக்கிறது. அதே தேதியில் மேலும் 2 ப்ராடெக்ட்கள் வெளியாக இருக்கின்றன. இந்த ஐக்யூ மாடல்களின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இதுவரையில் வெளியான அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடல்களை தூக்கி சாப்பிடும்படி ஐக்யூ நிறுவனத்தின் இசட்10 டர்போ ப்ரோ பிளஸ் இருக்கும் என்று மார்கெட் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்தன. இதை ஐக்யூ நிறுவனமும் உறுதி செய்தது. அதோடு ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9400+ எஸ்ஓசி (Dimensity 9400+ SoC) சிப்செட் இதில் வரும் என்றும் தெரிவித்தது.

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது! 8000mAh பேட்டரியுடன் ஆக.7-க்கு ரெடி!

ஆகவே, பேட்டரி கேபாசிட்டி மட்டுமல்லாமல், அதோடு பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட மாடலாக இருக்கப்போகிறது என்பது உறுதியாகியது. ஆனால், எப்போது வெளியாகும் என்பது உறுதி செய்யப்படாமல் இருந்தது. இப்போது, ஐக்யூ டிடபுள்யூஎஸ் ஏர்3 ப்ரோ (iQOO TWS Air3 Pro) மற்றும் ஐக்யூ 22.5W 10000mAh (iQOO 22.5W 10000mAh) பவர் பேங்குடன் அது உறுதி செய்யப்பட்டது.

அதாவது, ஆகஸ்ட் 7ஆம் தேதி சீன மார்கெட்டில் ஐக்யூ இசட்10 டர்போ ப்ரோ பிளஸ் வெளியாக இருக்கிறது. இந்த மாடலுடன் ஐக்யூ டிடபுள்யூஎஸ் ஏர்3 ப்ரோ மற்றும் ஐக்யூ 22.5W 10,000mAh பவர் பேங்க் ஆகிய ப்ராடெக்ட்களும் வெளியாக இருக்கின்றன. இதில் ஐக்யூ போனின் பேட்டரி மற்றும் சிப்செட் மட்டுமல்லாமல், கூடுதலாக சில பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன.

ஐக்யூ இசட்10 டர்போ ப்ரோ பிளஸ் அம்சங்கள் (iQOO Z10 Turbo Pro+ Specifications): இந்த ஐக்யூ போனில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட அமோலெட் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இதுபோக கியூ2 கேமிங் சிப் (Q2 Gaming Chip) கிடைக்க இருக்கிறது. ஆகவே, இந்த போனை கேமிங் மாடலாக பார்க்கலாம். பேக்கப் மற்றும் பர்ஃபாமென்ஸ் மிரளவிடுகிறது.

கிளவுட் சீ ஒயிட் (Cloud Sea White), டெசர்ட் கோல்டு (Desert Gold) மற்றும் போலர் கிரே (Polar Grey) ஆகிய ஷேட்களில் அதிகார்பூர்வ டிசைன் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்க இருக்கிறது. இதுவரையில் பார்த்த பீச்சர்கள் மற்றும் விவரங்கள் மட்டுமே அதிகாரப்பூர்மாக உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதுபோக முக்கிய பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. அந்த பீச்சர்களை பார்க்கையில், 6.78 இன்ச் பிளாட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது 1.5K ரெசொலூஷன் மற்றும் கேமிங் பிரியர்களுக்காக 144FPS கேமிங் கிடைக்க இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்க இருக்கிறது.

மெயின் கேமராவில் வழக்கமாக கிடைக்கும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி மற்றும் சோனி எல்ஒய்டி 600 (SONY LYT 600) சென்சார் கிடைக்க இருக்கிறது. IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வர இருக்கிறது. சீன வெளியீ்ட்டுக்கு பிறகு இந்தியா உள்பட மற்ற நாடுகளிலும் எதிர்பார்க்கலாம். இங்கு பேட்டரிக்காகவே வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z10 Turbo Pro Plus With 8000mAh Battery To Launch August 7 Check Confirmed Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X