மிரண்டு போவீங்க.. 8000mAh பேட்டரி.. 144Hz வலொரன்ட் மொபைல்.. Q2 கேமிங் சிப்.. ஆக.7-க்கு வருது.. எந்த மாடல்?
இதுவரையில் வெளியான அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட ஸ்மார்ட்போன்களை தூக்கி சாப்பிடும்படி 8000mAh பேட்டரி கொண்ட மாடலாக ஐக்யூ இசட்10 டர்போ ப்ரோ பிளஸ் (iQOO Z10 Turbo Pro+) வெளியாக இருக்கிறது. இப்போது, வலொரன்ட் மொபைலில் (Valorant Mobile) 144Hz மோட் கொண்ட மாடலாக வெளியாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரீமியம் கேமிங் பிரியர்களுக்காவே பல்வேறு பீச்சர்களை கொடுக்கும் இந்த ஐக்யூ இசட்10 டர்போ ப்ரோ பிளஸ் போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
கேமிங் பிரியர்களுக்காகவே பிரத்யேகமாக சிப்செட், பேட்டரி மற்றும் டிஸ்பிளே பீச்சர்களில் அல்ட்ரா பிரீமியம் காட்டி இருக்கும் இந்த ஐக்யூ மாடலானது ஆகஸ்ட் 7ஆம் தேதி சீன மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மட்டுமல்லாமல், ஐக்யூ டிடபுள்யூஎஸ் ஏர்3 ப்ரோ (iQOO TWS Air3 Pro) மற்றும் ஐக்யூ 22.5W 10000mAh (iQOO 22.5W 10000mAh) பவர் பேங்க் வெளியாக இருக்கிறது.

இதில், ஐக்யூ இசட்10 டர்போ ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனானது, சீன மட்டுமல்லாமல் இந்தியா உள்பட கேமிங் மாடல்களை விரும்பும் பல்வேறு நாடுகளில் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. ஏனென்றால், இதில் 8000mAh பேட்டரி கிடைக்கிறது. இது ஐக்யூ மாடல்களிலேயே அதிக கேபாசிட்டி கொண்டதாகும். மற்ற பிராண்ட்களிலும் இவ்வளவு கேபாசிட்டி கிடையாது.
கேமிங்கின் போது, அதிக பேக்கப் கொடுக்க இவ்வளவு பெரிய பேட்டரி கிடைக்க இருக்கிறது. இந்த பேட்டரி மூலம் 20 மணி நேரங்களுக்கு கேமிங் பேக்கப் பெற்று கொள்ள முடியும். அதேபோல 22.2 மணி நேரங்களுக்கு வீடியோ பிளே பேக் பெற்று கொள்ளலாம். வெறும் 9 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும் 3 மணி நேரங்களுக்கு எம்ஓபிஏ கேம்களை (MOBA Games) விளையாடி கொள்ள முடியும்.
அதே நேரத்தில் லேக்-ப்ரீ பர்ஃபாமென்ஸ் கொடுக்க ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9400பிளஸ் எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 9400+ SoC) சிப்செட் மட்டுமல்லாமல், கேமிங் என்ஹான்ஸ்மெண்ட் கொடுக்க கியூ2 (Q2) என்னும் பிரத்யேக கேமிங் சிப்செட் கிடைக்க இருக்கிறது. டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கிறது.

பிளாட் டிசைன் கிடைப்பதால், கேமிங் அனுபவம் பிரீமியமாக இருக்கும். இந்த கேமிங் பீச்சர்களே மிரளவிடும்படி இருக்கிறது. இப்போது, வலொரன்ட் மொபைலில் 144Hz மோட் கொண்ட மாடலாகவும் இந்த ஐக்யூ இசட்10 டர்போ ப்ரோ பிளஸ் இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முதல் 144Hz மோட் வலொரன்ட் மொபைல் மாடலாகும் என்று ஐக்யூ நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
கேமிங் பிரியர்களிடையே வலொரன்ட் மிகப்பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. சீனா மட்டுமல்லாமல், இந்தியாவிலும் இதற்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்தியாவில் பிசியில் மட்டுமே கிடைக்கிறது. மொபைலில் பீட்டா வெர்ஷன் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், சீனாவில் வலொரன்ட் மொபைல் முழு வீச்சில் தயாராகிவருகிறது. இப்போது, இதற்கு ஏற்ப ஸ்மார்ட்போன்களும் வெளியாக இருப்பது உறுதியாகி இருக்கின்றன.
ஆகவே, சீனாவுக்கு பிறகு இந்தியா உள்பட கேமிங் பிரியர்கள் அதிகம் இருக்கும் நாடுகளிலும் இது வெளியாக வாய்ப்புள்ளது. இதனாலேயே, இந்தியாவிலும் இந்த ஐக்யூ இசட்10 டர்போ ப்ரோ பிளஸ் போனுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. கிளவுட் சீ ஒயிட் (Cloud Sea White), டெசர்ட் கோல்டு (Desert Gold), போலர் கிரே (Polar Grey) கலர்கள் உறுதியாகி இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








