மொத்த சாம்ராஜ்யமே இதுக்கு வெயிட்டிங்.. முழுசா 8000mAh பேட்டரி.. 90W பாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமும் மிரளும்படியான பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடலாக ஐக்யூ இசட்10 டர்போ பிளஸ் (iQOO Z10 Turbo+) சீன மார்கெட்டில் வெளியாகியது. இப்போது, குளோபல் மார்கெட்களில் இறக்குமதி செய்ய கிடைக்கிறது. இதனால், இந்திய வெளியீடு விரைவில் இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, இந்தியாவில் இருக்கும் கேமிங் மற்றும் அதிக பேட்டரி கேபாசிட்டி விரும்பும் ஸ்மார்ட்போன் பிரியர்கள் வெயிட்டிங் மோடில் காத்திருக்கின்றனர்.
இந்திய மார்கெட்டில் ஐக்யூ இசட் 10 (iQOO Z10), ஐக்யூ இசட்10எக்ஸ் (iQOO Z10x) மற்றும் ஐக்யூ இசட்10 லைட் (iQOO Z10 Lite) ஆகிய மாடல்கள் கிடைக்கின்றன. இதில் ஐக்யூ இசட் 10 போனில் 7300mAh பேட்டரி மற்றும் ஐக்யூ இசட்10எக்ஸ் போனில் 6500mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த மாடல்கள் பட்ஜெட் விலையில் கிடைக்கின்றன. ஆனால், சீனாவில் டர்போ வேரியண்ட்கள் வெளியாகி இருக்கின்றன.

இதில் ஐக்யூ இசட்10 டர்போ பிளஸ் மாடலானது 8000mAh பேட்டரியுடன் வெளியாகி, சீனா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளின் ஸ்மார்ட்போன் மார்கெட்டையும் மிரளவைத்தது. சீனாவில் ஏற்கனவே விற்பனை தொடங்கி சக்கைப்போடு போட்டுவருகிறது. இப்போது, குளோபல் மார்கெட்களில் இறக்குமதி செய்ய கிடைக்கிறது. டிரேடிங்ஷென்சென் (TradingShenzhen) மூலம் பல்வேறு நாடுகளுக்கு இறக்குமதி செய்ய கிடைக்கிறது.
ஆகவே, குளோபல் வெளியீடு நெருங்கிவிட்டது தெரிகிறது. ஏனென்றால், இந்திய மார்கெட்டில் அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடல்கள் இப்போது மிகப்பெரும் வரவேற்பு பெறுகின்றன. அதேநேரத்தில் ஐக்யூ இசட்10 மற்றும் ஐக்யூ இசட்10எக்ஸ் போன்ற மாடல்களும் வெளியாகி இருக்கின்றன. ஆகவே, இந்த ஐக்யூ இசட்10 டர்போ பிளஸ் போனை விரைவில் எதிர்பார்க்கலாம்.
இது அதே பெயரில் வருகிறதா அல்லது ரீபிராண்ட் செய்யப்பட்ட வெர்ஷனாக வருகிறதா என்பதை வரும் காலங்களில் தெரிந்து கொள்ளலாம். இப்போது, இந்த ஐக்யூ இசட்10 டர்போ பிளஸ் போனின் முழு பீச்சர்கள் மற்றும் சீன மார்கெட்டில் அந்த போனுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட விலை ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். பேட்டரியில் மட்டுமல்லாமல், மற்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்புகிறது.
ஐக்யூ இசட்10 டர்போ பிளஸ் அம்சங்கள் (iQOO Z10 Turbo+ Specifications): ஹைலைட் பீச்சராக 8000mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 6.78 (2800 x 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் 1.5K ரெசொலூஷன் வருகிறது. அதிக பேட்டரி கிடைத்தாலே அதில் கேமிங் பீச்சர்களும் இருக்கும். அதேபோல இதில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.
மேலும், 5500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 4320Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. ஆக்டா கோர் டைமன்சிட்டி 9400+ 3என்எம் (Octa Core Dimensity 9400+ 3nm) சிப்செட் மற்றும் அதற்கான இம்மார்டலிஸ் ஜி925 ஜிபியு (Immortalis G925 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 5 (Origin OS 5) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.
சோனி எல்ஒய்டி 600 சென்சாருடன் 50 எம்பி ரியர் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ கேமரா மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் உள்ளது. IP65 ரேட்டிங் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. சீனாவில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.27,995 பட்ஜெட்டில் இருக்கிறது. இந்தியாவில் இதே பட்ஜெட்டில் வரலாம்.


Click it and Unblock the Notifications








