ஆகஸ்ட் மாதம் உறுதி.. வருகிறது 8000mAh பேட்டரி கொண்ட iQOO 5ஜி போன்.. எந்த மாடல்?
8000mAh பேட்டரி கொண்ட ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் (iQOO Z10 Turbo Plus) ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் சீனாவில் அறிமுகமாகும் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக சீனாவில் வெளியான சில வாரங்களில் இந்த புதிய போன் இந்தியா மற்றும் பல நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த போனில் செல்பீ கேமராவிற்கான ஹோல்- பஞ்ச் கட்அவுட் (Hole Punch Cutout) ஆனது டிஸ்பிளேவின் மேல் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த புதிய ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் அம்சங்கள் (iQOO Z10 Turbo Plus Specifications): 8000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படும். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
6.78-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5K ரெசல்யூஷன் (1.5K resolution), 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இதில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய ஐக்யூ போனில் உள்ளன.
டைமன்சிட்டி 9400 பிளஸ் சிப்செட் (Dimensity 9400 Plus chipset) வசதியுடன் இந்த புதிய ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த புதிய ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த புதிய ஐக்யூ ஸ்மார்ட்போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஐக்யூ நிறுவனம்.
மேலும் IP68/69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய ஐக்யூ போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் போனில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த புதிய ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் போன் வெளியாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








