Home
Mobile

அடிச்சான் பாரு iQOO.. 8000mAh பேட்டரி.. சோனி டிஸ்பிளே.. புதிய 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் (iQOO Z10 Turbo Plus) ஸ்மார்ட்போன் மாடலை இன்று அறிமுகம் செய்துள்ளது ஐக்யூ நிறுவனம். குறிப்பாக 8000mAh பேட்டரி, டைமன்சிட்டிசி சிப்செட், சோனி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஐக்யூ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் அம்சங்கள் (iQOO Z10 Turbo Plus Specifications): 6.78-இன்ச் 1.5கே அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2800×1260 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ், 5500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 4320Hz PWM டிம்மிங், டிசி டிம்மிங், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

அடிச்சான் பாரு iQOO.. 8000mAh பேட்டரி.. புதிய 5ஜி போன் அறிமுகம்..

3.73ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் டைமன்சிட்டி 9400 பிளஸ் 3என்எம் பிராசஸர் ((3.73GHz Octa-Core Dimensity 9400+ 3nm processor) உடன் இந்த புதிய ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் போன் வெளிவந்துள்ளது. மேலும் இம்மார்டலிஸ் ஜி925 ஜிபியு (immortalis-G925 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் போனில் உள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த கேமிங் அனுபவத்தைக் கொடுக்கும்.

16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி உடன் இந்த புதிய ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது. அதேபோல் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வசதியும் ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் மாடலில் உள்ளது.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உடன் ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் IP65 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and splash resistant)உடன் இந்த புதிய ஐக்யூ போன் வெளிவந்துள்ளது.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி எல்ஒய்டி-600 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.

ஓர்ஜின்ஓஎஸ் 5 (OriginOS 5) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த போனின் எடை 212 கிராம் ஆகும்.

அடிச்சான் பாரு iQOO.. 8000mAh பேட்டரி.. புதிய 5ஜி போன் அறிமுகம்..

8000mAh பேட்டரி உடன் ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W சார்ஜிங் ஆதரவும் உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11 பிஇ, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. போலர் கிரே (Polar Grey), டெசர்ட் கோல்டு (Desert Gold) மற்றும் கிளவுட் ஒயிட் (Cloud White) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

ஆனால் இந்த புதிய ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் போனின் ஆரம்ப விலை 2299 yuan (இந்திய மதிப்பில் ரூ.27,995)-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z10 Turbo Plus launched in China: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X