Home
Mobile

அடுத்த மிரட்டலான iQOO போன் ரெடி.. 8000mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே.. 16ஜிபி ரேம்.. எந்த மாடல்?

ஐக்யூ நிறுவனம் தனது புதிய ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் (iQOO Z10 Turbo Plus) ஸ்மார்ட்போனை விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்ய உள்ளது. அதுவும் தரமான சிப்செட், 8000mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஐக்யூ போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த புதிய போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் அம்சங்கள் (iQOO Z10 Turbo Plus Specifications): 6.78-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5K ரெசல்யூஷன் (1.5K resolution), 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மிரட்டலான iQOO போன் ரெடி.. 8000mAh பேட்டரி.. எந்த மாடல்?

OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இதில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய ஐக்யூ போனில் உள்ளன.

சக்திவாய்ந்த டைமன்சிட்டி 9400 பிளஸ் சிப்செட் (Dimensity 9400 Plus chipset) வசதியுடன் இந்த புதிய ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த புதிய ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த புதிய ஐக்யூ ஸ்மார்ட்போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஐக்யூ நிறுவனம்.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் போனில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் IP68/69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய ஐக்யூ போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படும். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z10 Turbo Plus key specifications leaked online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X