அவசரப்பட்டு எந்த போனும் வாங்காதீங்க.. 7300mAh பேட்டரி.. ஏப்.11-ல் இந்தியாவுக்கு வரும் புது iQOO போன்..
ஐக்யூ நிறுவனம் தனது புதிய ஐக்யூ இசட்10 (iQOO Z10) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் வரும் ஏப்ரல் 11-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். இந்நிலையில் ஐக்யூ இசட்10 போனின் விலை மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஐக்யூ இசட்10 அம்சங்கள் (iQOO Z10 Specifications): 6.7-இன்ச் குவாட் கர்வ்ட் அமோலெட் (quad-curved AMOLED) டிஸ்பிளே உடன் ஐக்யூ இசட்10 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 (Qualcomm Snapdragon 7s Gen 3) சிப்செட் வசதியுடன் ஐக்யூ இசட்10 ஸ்மார்ட்போன் வெளிவரும். இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த போன் இயங்கும்.
ஆனாலும் ஆண்ட்ராய்டு ஒஎஸ் அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி ஐக்யூ இசட்10 போனில் உள்ளது. பின்பு டால்பி ஆடியோ ஆதரவுடன் ஐக்யூ இசட்10 போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஐக்யூ இசட்10 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு ஏஐ அம்சங்கள் இந்த போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7300mAh பேட்டரி உடன் ஐக்யூ இசட்10 ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ கிராபிக்ஸ் கார்டு உடன் இந்த போன் வெளிவரும்.
க்லேசியர் சில்வர் (Glacier Silver), ஸ்டெல்லார் பிளாக் (Stellar Black) நிறங்களில் ஐக்யூ இசட்10 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 5ஜி, 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.4, வைஃபை 6, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஐக்யூ போனில் உள்ளன. பின்பு MIL-STD-810H இராணுவ சான்றிதழுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும்.
128ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ இசட்10 ஸ்மார்ட்போன் ரூ.21,999 விலையில் அறிமுகமாகும். ஆனால் இந்த போனுக்கு ரூ.2000 பேங்க் ஆஃபர் வழங்கப்படும். எனவே இந்த புதிய ஐக்யூ போனை ரூ.19999 விலையில் வாங்கிவிட முடியும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ஐக்யூ இசட்10 போன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications








