Home
Mobile

வெச்சி செஞ்சிட்டாங்க.. ரூ.10,000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. SONY கேமரா.. மிலிட்டரி கிரேடு பாடி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ரூ.10,000 பட்ஜெட்டில் அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடலாக ஐக்யூ இசட்10 லைட் 5ஜி (iQOO Z10 Lite 5G) வெளியாக இருக்கிறது. சோனி சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, IP64 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ட் போன்ற பீச்சர்களில் பட்டையை கிளப்புகிறது. இந்த ஐக்யூ இசட்10 லைட் 5ஜி போனின் பீச்சர்கள் எப்படி? விலை மற்றும் விற்பனை எப்படி? உள்ளிட்ட விவரங்கள் இதோ.

ஜூன் 18ஆம் தேதி இந்த ஐக்யூ இசட்10 லைட் 5ஜி வெளியாக இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருப்பதும், ரூ.10,000 செக்மெண்ட்டில் ஆர்டருக்கு கிடைக்க இருப்பதும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, ரூ.9,999 பட்ஜெட்டில் ஆரம்ப விலை இருக்க வாய்ப்புள்ளது. முக்கிய பீச்சர்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

வெச்சி செஞ்சிட்டாங்க! ரூ.10,000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. SONY கேமரா!

ஐக்யூ இசட்10 லைட் 5ஜி அம்சங்கள் (iQOO Z10 Lite 5G Specifications): இந்த ஐக்யூ போனில் 6000mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. இந்த பேட்டரி மூலம் 22.7 மணி நேரங்களுக்கு வீடியோ பிளேபேக், 17.5 மணி நேரங்களுக்கு ஸ்க்ரோலிங் ரீல்ஸ் பேக்கப் கிடைக்கும். ஒரு நாளுக்கு 1 முறை சார்ஜிங் வீதம் 5 வருடங்களுக்கு பேட்டரி ஹெல்த் கிடைக்கிறது.

ஆகவே, மொத்தமாக 1600 சார்ஜிங் சைக்கிள் எதிர்பார்க்கலாம். அதற்கு பிறகும் பேட்டரி ஹெல்த் 80 சதவீதமாக மட்டுமே குறையும். இந்த ஐக்யூ இசட்10 லைட் 5ஜி போனில் 8 ஜிபி ரேம் + 8 ஜிவி விர்ச்சுவல் (Virtual RAM) மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. இதைவிட கம்மியான வேரியண்ட் கிடைக்க வாய்ப்புள்ளது.

வெச்சி செஞ்சிட்டாங்க! ரூ.10,000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. SONY கேமரா!

IP64 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. மேலும், ஹை டெம்ப்ரேச்சர், லோவ் டெம்ப்ரேச்சர், டஸ்ட் ரெசிஸ்டன்ட், வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் ஷாக் ரெசிஸ்டன்ட் போன்ற டெஸ்ட்களுக்காக மிலிட்டரி கிரேடு சர்டிபிகேஷன் (MIL-STD-810H) பெற்றுள்ளது. ஆகவே, கிட்டத்தட்ட ரக்கட் மாடலாகவே இதை மார்கெட்டில் எதிர்பார்க்கலாம்.

இந்த ஐக்யூ இசட்10 லைட் 5ஜி மாடலானது 50 எம்பி சோனி (SONY) சென்சார் கேமரா கொடுக்கிறது. அதேபோல செகண்டரி கேமராவுடன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்டிருக்கிறது. இந்த கேமராவில் ஏஐ எரைஸ் (AI Erase), ஏஐ போட்டோ என்ஹான்ஸ் (AI Photo Enhance) போன்ற ஏஐ பீச்சர்களும் கிடைக்கின்றன.

சைபர் கிரீன் (Cyber Green) மற்றும் டைட்டானியம் ப்ளூ (Titanium Blue) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப 5ஜி பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட் கிடைக்கிறது. இருப்பினும், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS), ஃபன்டச்ஓஎஸ் 15 (Funtouch OS 15) வருகிறது.

வெச்சி செஞ்சிட்டாங்க! ரூ.10,000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. SONY கேமரா!

இந்த ஐக்யூ இசட்10 லைட் 5ஜி போனில் 1000 நிட்ஸ் எச்பிஎம் (HBM) மோட் கொண்ட பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் பிளாட் டிஸ்பிளே டிசைன் கொடுக்கிறது. இந்த பீச்சர்களை மட்டுமே ஐக்யூ இந்தியா நிறுவனம், அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. நாளைக்கு முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் தெரியவரும்.

Best Mobiles in India

English summary
iQOO Z10 Lite 5G With 50MP Camera To Launch on June 18 Under Rs 10000 in India Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X