Home
Mobile

யாரு சாமி அவன்.. ரூ.9,499 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 1TB மெமரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டே மூக்கில் விரல் வைக்கும்படியான அடிமட்ட பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா, 8 ஜிபி ரேம், 1 டிபி மெமரி சப்போர்ட் போன்ற பீச்சர்களுடன் ஐக்யூ இசட்10 லைட் 5ஜி (iQOO Z10 Lite 5G) வெளியாகி இருக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கொண்ட இந்த ஐக்யூ இசட்10 லைட் 5ஜி போனின் பீச்சர்கள், விலை விவரங்கள் இதோ.

ஐக்யூ இசட்10 லைட் 5ஜி அம்சங்கள் (iQOO Z10 Lite 5G Specifications): இந்த ஐக்யூ போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கிடைக்கிறது. மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (6nm Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட் கிடைக்கிறது.

யாரு சாமி அவன்.. ரூ.9,499 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா!

3 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடல்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்தலாம். வாட்டர் டிராப் டிசைனில் 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது.

இந்த டிஸ்பிளேவில் டார்க் மோட் (Dark Mode) உள்ளது. மேலும், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. ஃபன்டச் ஓஎஸ 15 வருவதால், கேமராவில் ஏஐ எரேஸ் மற்றும் ஏஐ போட்டோ என்ஹான்ஸ் ஆகிய ஏஐ பீச்சர்கள் வருகின்றன. ஸ்டைலிஷ் நைட் ஃபில்டர்கள் (Stylish Night Filters) வருகின்றன.

மேலும், போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), லைவ் போட்டோ (Live Photo) போன்ற பீச்சர்களையும் கொடுக்கிறது. இந்த ஐக்யூ இசட்10 லைட் 5ஜி போனில் ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி பொக்கெ கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. 5 எம்பி செல்பீ கேமரா கொடுக்கிறது.

யாரு சாமி அவன்.. ரூ.9,499 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா!

இந்த ரூ.9,499 பட்ஜெட்டிலும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6000mAh பேட்டரி கொடுக்கிறது. இதுபோக IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. மேலும், வெட் ஹேண்ட் (Wet Hand Touch) மற்றும் மிலிட்டரி கிரேடு புரொடெக்சன் வருகிறது. இந்த ஐக்யூ இசட்10 லைட் 5ஜி போனில் சைடு-பிங்கர்பிரிண்ட், ஆடியோ பூஸ்டர் வருகிறது.

இந்த ஐக்யூ இசட்10 லைட் 5ஜி போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.9,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.10,999ஆகவும் இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் மாடலின் விலை ரூ.12,999ஆக இருக்கிறது. ரூ.500 பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

ஆகவே, ரூ.9,499 பட்ஜெட்டில் ஆர்டர் செய்யலாம். ஜூன் 25ஆம் தேதி முதல் அமேசான் (Amazon) மற்றும் ஐக்யூ தளங்களில் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது. டைட்டானியம் ப்ளூ (Titanium Blue) அல்லது சைபர் கிரீன் (Cyber Green) கலர்களில் ஆர்டர் செய்யலாம். ரூ.500 டிஸ்கவுண்ட் எஸ்பிஐ கார்டுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டுக்கு பேட்டரி சிஸ்டம் வரவேற்கத் தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z10 Lite 5G With 50MP Camera Launched India Sale From June 25 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X