வெளுக்குது ஆர்டர்.. வெறும் ரூ.9,499 போதும்.. SONY கேமரா.. 6000mAh பேட்டரி.. 15W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
அடிச்சு புடிச்சு போடும்படியான பட்ஜெட்டில் சோனி சென்சார் மெயின் கேமரா, 6000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், IP64 ரேட்டிங் ரெசிஸ்டன்ட், மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ட் போன்ற பீச்சர்களுடன் வெளியான ஐக்யூ இசட்10 லைட் 5ஜி (iQOO Z10 Lite 5G) போனின் விற்பனை தொடங்கி இருக்கிறது. டிஸ்கவுண்ட் போக மேலும் அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. இந்த ஐக்யூ இசட்10 லைட் 5ஜி போனை எங்கே ஆர்டர் செய்யலாம்? விலை மற்றும் முழு பீச்சர்கள் எப்படி?
ஐக்யூ இசட்10 லைட் 5ஜி அமேசான் விற்பனை (iQOO Z10 Lite 5G Amazon Sale): இந்த ஐக்யூ போனில் மூன்று வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.9,999ஆக இருக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.10,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.12,999ஆகவும் இருக்கிறது.

அமேசான் (Amazon) விற்பனையில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. ரூ.500 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் போக ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆகவே, 4 ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.9,499 பட்ஜெட்டிலும், 6 ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.10,499 பட்ஜெட்டிலும், 8 ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.12,499 பட்ஜெட்டிலும் ஆர்டர் செய்து கொள்ள முடியும். இந்த ஐக்யூவில் 2 கலர்கள் இருக்கின்றன.
டைட்டானியம் ப்ளூ (Titanium Blue) மற்றும் சைபர் கிரீன் (Cyber Green) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம். டிசைனும் பிரீமியம் லுக் கொடுக்கிறது. அதேபோல டியூரபிலிட்டி கொண்ட பாடி கிடைக்கிறது. ஏனென்றால், மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ட் மற்றும் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. இப்போது மற்ற பீச்சர்களை பார்க்கலாம்.
ஐக்யூ இசட்10 லைட் 5ஜி அம்சங்கள் (iQOO Z10 Lite 5G Specifications): இந்த ஐக்யூ போனில் வெட் ஹேண்ட் டச் (Wet Hand Touch) சப்போர்ட் கொண்ட 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த வாட்டர் டிராப் நாட்ஜ் டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மட்டுமல்லாமல், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி பொக்கெ கேமரா கிடைக்கிறது. இருப்பினும், ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கிடைக்கிறது. ஐக்யூ இசட்10 லைட் 5ஜி போனில் 5 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. பர்ஃபாமென்ஸ் மற்றும் யுஐ பக்கம் குறை சொல்லிவிட முடியாது. ஏனென்றால், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது.
ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) மற்றும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது. பேட்டரி சிஸ்டம் முக்கியமாக பார்க்கப்படுகிறது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட பெரிய 6000mAh பேட்டரி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications