Home
Mobile

வெச்சி செஞ்சிட்டாங்க.. வெறும் ரூ.13,000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 256GB மெமரி.. எந்த மாடல்?

அடிமட்ட பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 15W ஃபாஸ்ட் சார்ஜிங், சோனி சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா போன்ற பீச்சர்களை கொடுக்கும் ஐக்யூ இசட்10 லைட் 5ஜி (iQOO Z10 Lite 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. இந்த ஐக்யூ ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் எப்படி? தள்ளுபடி எப்படி? உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் 19 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.13,690 விலைக்கு 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. இந்த விலையிலும் ரூ.685 கிரெடிட் கார்டு தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.13,005 பட்ஜெட்டில் இந்த ஐக்யூ இசட்10 லைட் ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் இதில் தள்ளுபடி கிடைக்கிறது.

வெச்சி செஞ்சிட்டாங்க.. வெறும் ரூ.13,000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி!

ஐக்யூ இசட்10 லைட் 5ஜி அம்சங்கள் (iQOO Z10 Lite 5G Specifications): இந்த ஐக்யூ ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) மற்றும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

இந்த பட்ஜெட்டுக்கு சிப்செட் பர்ஃபாமென்ஸ் பக்காவாகவே எதிர்பார்க்கலாம். இதுபோக 2 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்களையும் (Android Updates) மூன்று வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களையும் (Security Updates) அப்டேட்களையும் கொடுத்து பட்டையை கிளப்பி இருக்கிறது. இதில் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்படுகிறது.

ஆகவே, டிஸ்பிளேவுக்கு வெட் ஹேண்ட் டச் (Wet Hand Touch) கிடைக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பெரிய பேட்டரி கிடைக்கிறது.

6000mAh பேட்டரி கொடுக்கப்படுகிறது. இந்த பேட்டரிக்கு 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, ஸ்லிம் எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், 8.19 எம்எம் தடிமன் மற்றும் 202 கிராம் எடை கொடுக்கிறது. இந்த ஐக்யூ ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி பொக்கெ கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா கிடைக்கிறது.

இந்த கேமராவுக்கு ஆட்டோ போகஸ் சப்போர்ட் கிடைக்கிறது. எச்டி வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 5 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ போன்ற வழக்கமாக பீச்சர்கள் கிடைக்கின்றன.

இந்த ஐக்யூ இசட்10 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் டைட்டானியம் ப்ளூ (Titanium Blue) மற்றும் சைபர் கிரீன் (Cyber Green) ஆகிய 2 கலர்கள் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த கலர்களில் பிரீமியம் லுக் மற்றும் பட்ஜெட்டைவிட கூடுதலாக கிடைக்கும் டியூரபிலிட்டி இருக்கிறது. அதாவது, இந்த ஸ்மார்ட்போனுக்கு மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்படுகிறது.

மலிவான விலைக்கு 6000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனுக்கு இந்த ஐக்யூ இசட்10 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் பக்காவான தேர்வாக இருக்கும். ஏனென்றால், பேட்டரி அதிகமாக இருந்தும் அதை பயன்படுத்த பர்ஃபாமென்ஸ் வேண்டும். ஆகவே, 4 ஜிபி ரேம், 6 ஜிபி ரேம் மாடலுக்கு பதிலாக இந்த 8 ஜிபி ரேம் மாடலை வாங்கும்போது, அதை எதிர்பார்க்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X