ஜூன் 18 உறுதி.. இந்தியாவுக்கு வரும் புதிய iQOO போன்.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
ஐக்யூ (iQOO) நிறுவனம் தனது புதிய ஐக்யூ இசட்10 லைட் 5ஜி (iQOO Z10 Lite 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய போன் வரும் ஜூன் 18-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்யூ இசட்10 லைட் 5ஜி அம்சங்கள் (iQOO Z10 Lite 5G specifications): 6000mAh பேட்டரி உடன் ஐக்யூ இசட்10 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் 6.74-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 50எம்பி டூயல் கேமரா உள்ளிட்ட பல அம்சங்களுடன் இந்த புதிய ஐக்யூ இசட்10 லைட் 5ஜி போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஐக்யூ இசட்10 லைட் 5ஜி போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். பின்பு இந்த போன் ரூ.10,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் எனத் தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ஐக்யூ இசட்10எக்ஸ் 5ஜி போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
ஐக்யூ இசட்10எக்ஸ் 5ஜி அம்சங்கள் ( iQOO Z10x 5G Specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் (MediaTek Dimensity 7300 SoC) வசதியுடன் ஐக்யூ இசட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங பயனர்களை கவரும் வகையில் மாலி-ஜி615 எம்சி2 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ஐக்யூ ஸ்மார்ட்போன்.
அதேபோல் 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஐக்யூ இசட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2408 × 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1050 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor)
ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான பன்டச்ஓஎஸ் 15 மூலம் இந்த ஐக்யூ இசட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
இந்த ஐக்யூ இசட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என டூயர் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. பின்பு இந்த போனில் 4K வீடியோ ரெக்கார்டிங் (Video Recording) சப்போர்ட் கிடைக்கிறது.

மேலும் 5ஜி (NSA), 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ax (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், க்ளோனாஸ், பெய்டு, யூஎஸ்பி டைப்-சி 2.0 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் யூஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட வசதிகளும் இந்த போனில் உள்ளன. அல்ட்ராமரைன் மற்றும் டைட்டானியம் ஆகிய 2 கலர்களில் இந்த போனை வாங்க முடியும்.
தரமான இராணுவ தர MIL-STD-810H சான்றிதழ் பெற்றுள்ளது இந்த புதிய போன். அதேபோல் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வசதியும் இந்த போனில் உள்ளது. 6500mAh பேட்டரி உடன் ஐக்யூ இசட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. அமேசான் தளத்தில் இந்த போன் ரூ.13,499 விலையில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications