Home
Mobile

மிரள வைக்கும் iQOO.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

ஐக்யூ நிறுவனம் தனது புதிய ஐக்யூ இசட்10 லைட் 4ஜி (iQOO Z10 Lite 4G) ஸ்மார்ட்போனை ரஷ்யாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த புதிய ஐக்யூ இசட்10 லைட் 4ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஐக்யூ இசட்10 லைட் 4ஜி அம்சங்கள் (iQOO Z10 Lite 4G Specifications): 6.67-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியுடன் ஐக்யூ இசட்10 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080×2400 பிக்சல்ஸ், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

மிரள வைக்கும் iQOO..புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது புதிய ஐக்யூ இசட்10 லைட் 4ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.

தரமான ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 685 சிப்செட் (octa-core Qualcomm Snapdragon 685 chipset) உடன் இந்த புதிய ஐக்யூ இசட்10 லைட் 4ஜி போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் ஐக்யூ இசட்10 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி கொண்டுள்ளது ஐக்யூ இசட்10 லைட் 4ஜி ஸ்மார்ட்போன். மேலும் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) இந்த ஐக்யூ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஐக்யூ நிறுவனம்.

6000mAh பேட்டரி வசதியுடன் ஐக்யூ இசட்10 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனின் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

4ஜி எல்டிஇ, புளூடூத் 5.0, டூயல்-பேண்ட் வைஃபை, யுஎஸ்பி டைப்-சி, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஐக்யூ இசட்10 லைட் 4ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் இந்த போனின் எடை 198 கிராம் ஆகும். கிரீன் மற்றும் ஒயிட் நிறங்களில் இந்த புதிய ஐக்யூ இசட்10 லைட் 4ஜி ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ இசட்10 லைட் 4ஜி போனின் விலை RUB 16,999 (இந்திய மதிப்பில் ரூ. 18,700) ஆகும். மேலும் இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை RUB 18,499 (இந்திய மதிப்பில் ரூ.20,300)-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z10 Lite 4G launched: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X