Home
Mobile

வெளுத்துக் கட்டும் அமேசான்.. 7300mAh பேட்டரி.. சோனி கேமரா.. ஆஃபரில் iQOO 5ஜி போன்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஐக்யூ இசட்10 5ஜி (iQOO Z10 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 7300எம்ஏஎச் பேட்டரி, ஸ்னாப்டிராகன் சிப்செட், சோனி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது ஐக்யூ இசட்10 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அமேசான் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ இசட்10 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 12 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.22,998 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்க முடியும்.

வெளுத்துக் கட்டும் அமேசான்.. ஆஃபரில் iQOO 5ஜி போன்.. எந்த மாடல்?

ஐக்யூ இசட்10 5ஜி அம்சங்கள் (iQOO Z10 5G Specifications): 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே வசதியுடன் ஐக்யூ இசட்10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளேவில் 2392 x 1080 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 பிளஸ், 20:9 ஸ்க்ரீன் ரேஷியோ, 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் வரையிலான எச்பிஎம், 5000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான பன்டச்ஓஎஸ் 15 மூலம் ஐக்யூ இசட்10 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஐக்யூ நிறுவனம்.

சக்திவாய்ந்த ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 (Snapdragon 7s Gen 3) உடன் ஐக்யூ இசட்10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரெனோ 720 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த கேமிங் அனுபவத்தைக் கொடுக்கும்.

7300mAh பேட்டரி வசதியுடன் ஐக்யூ இசட்10 5ஜி ஸ்மார்ட்போன்வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்கள் பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

சோனி IMX882 சென்சார், எப்/1.79 அபெர்க்ஷர் உடனான 50எம்பி ப்ரைமரி கேமர + எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

வெளுத்துக் கட்டும் அமேசான்.. ஆஃபரில் iQOO 5ஜி போன்.. எந்த மாடல்?

குறிப்பாக இந்த ஐக்யூ ஸ்மார்ட்போனின் எடை 199 கிராம் ஆகும். 5ஜி (SA / NSA), டூயல் 4ஜி வோல்ட், வைஃபை 6 802.11 ax, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், க்ளோனாஸ், பெய்டு, யூஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஐக்யூ இசட்10 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன.

அதுவும் இன்ப்ராரெட் சென்சார், இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், யூஎஸ்பி டைப்-C ஆடியோ, பாட்டம்-போர்ட்டு ஸ்பீக்கர், இராணுவ தர MIL-STD-810H சான்றிதழ், தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி65 உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த ஐக்யூ இசட்10 5ஜி போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z10 5G with 8GB RAM is available at a 12 percent discount on Amazon: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X