Home
Mobile

செம்ம டிமாண்ட்.. ஏப்.23 மீண்டும் விற்பனைக்கு வரும் iQOO-வின் 7300mAh பேட்டரி போன்!

7300எம்ஏஎச் என்கிற அளவிலான மெகா பேட்டரி (7300mAH Battery) உடன் அறிமுகமாகி, இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை திணறடித்துள்ள ஐக்யூ இஸட்10 5ஜி (iQOO Z10 5G) ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ஏப்ரல் 16 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதற்கிடையில் இந்த ஸ்மார்ட்போனின் அடுத்த அமேசான் விற்பனை (Next Amazon Sale) எப்போது என்கிற தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் உள்ள ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் பேனர் ஒன்றின்படி, இந்த ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை ஏப்ரல் 23 ஆம் தேதி அன்று நடக்கும். ஆனால் நள்ளிரவு 12 மணி முதலே வாங்க கிடைக்குமா அல்லது மதியம் 12 மணி முதல் விற்பனை வருமா என்பது குறித்த சரியான விவரங்கள் இல்லை.

ஏப்.23 மீண்டும் விற்பனைக்கு வரும் iQOO-வின் 7300mAh பேட்டரி போன்!

ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் (iQOO Z10 5G Price in India): இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.21,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.23,999 க்கும்மற்றும் டாப்-எண்ட் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,999 க்கும் வாங்க கிடைக்கும்.

ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது க்ளேசியர் சில்வர் (Glacier Silver) மற்றும் ஸ்டெல்லர் பிளாக் (Stellar Black) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும். அமேசான் இந்தியாவின் ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் பேனரின்படி இந்த ஸ்மார்ட்போன் ரூ.19,999 முதல் என்கிற ஆரம்ப விலையின் கீழ் வாங்க கிடைக்கும். இது பேங்க் டிஸ்கவுண்ட்-ஐ உள்ளடக்கிய விலையாக இருக்கலாம்.

ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள் (iQOO Z10 5G Full Specifications):
- டூயல் சிம் (நானோ + நானோ)
- 2392 x 1080 பிக்சல்ஸ்
- எச்டிஆர் 10 பிளஸ்
- 20:9 ஸ்க்ரீன் ரேஷியோ
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 1300 நிட்ஸ் வரையிலான எச்பிஎம்
- 5000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ்
- 6.77-இன்ச் எப்எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED Display)

- அட்ரெனோ 720 ஜிபியு உடனான 2.5GHz வரையிலான ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம்
- 128ஜிபி / 256ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ் உடனான 8ஜிபி / 12ஜிபி LPDDR4X ரேம்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான பன்டச்ஓஎஸ் 15 (FunTouch OS 15)

- டூயல் ரியர் கேமரா செட்டப்
- சோனி IMX882 சென்சார், எப்/1.79 அபெர்க்ஷர் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா
- எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 2எம்பி டெப்த் சென்சார்
- ஆரா லைட், 30 fps 4கே வீடியோ ரெக்கார்ட்
- எப்/2.0 அபெர்க்ஷர் உடனான 32MP செல்பீ கேமரா (30 fps 4கே வீடியோ ரெக்கார்ட்)
- 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 7300mAh பேட்டரி

- இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், இன்ப்ராரெட் சென்சார்
- யூஎஸ்பி டைப்-C ஆடியோ, பாட்டம்-போர்ட்டு ஸ்பீக்கர்
- இராணுவ தர MIL-STD-810H சான்றிதழ்
- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி65
- 5ஜி (SA / NSA)
- டூயல் 4ஜி வோல்ட்இ
- வைஃபை 6 802.11 ax
- ப்ளூடூத் 5.2
- ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பெய்டு, யூஎஸ்பி டைப்-சி
- அளவீட்டில் 7.92மிமீ
- எடையில் 199 கிராம்

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z10 5G Smartphone Next Amazon India Sale on April 23
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X