Home
Mobile

ஆல்ரெடி ஆர்டர் அள்ளுது.. ரூ.21,999 க்கு 7300mAh பேட்டரி.. iQOO Z10 5G நம்பி வாங்க நச்சுனு 4 காரணங்கள்!

7300எம்ஏஎச் பேட்டரி (7300mAh Battery) உடன் அறிமுகம் செய்யப்பட்ட ஐக்யூ இஸட்10 5ஜி (iQOO Z10 5G) ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை தொடங்கிவிட்ட நிலையில், ரூ.21,999 என்கிற ஆராம்ப விலையில் வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா என்கிற சந்தேகம் உங்களிடம் இருந்தால்.. கவலையை விடுங்கள், நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனை ஏன் நம்பி வாங்கலாம் என்கிற 4 நல்ல, நேர்மையான காரணங்களை (Reasons to Buy iQOO Z10 5G) இங்கே தொகுத்துள்ளோம்!

காரணம் 1 - தரமான பெர்பார்மென்ஸ் (Good Performance): இது குவால்காமின் மிட்-ரேஞ்ச் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட்டால் (Snapdragon 7s Gen 3 Chipset) இயக்கப்படுகிறது, இது 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த ஹார்ட்வேர் மிக்ஸ் (Hardware Mix) ஆனது வலுவான பெர்பார்மென்ஸ்-ஐ வழங்குகிறது.

iQOO Z10 5G நம்பி வாங்க நச்சுனு 4 காரணங்கள்!

ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் ஆனது மிகவும் திறமையான முறையில் வெப்பத்தை கையாளும் என்பதால், இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டிவ் ஆக உள்ள லிக்விட் கூலிங் சிஸ்டம் (Vapour Chamber cooling system) இல்லை. மிகவும் பிரபலமான மற்றும் கிராஃபிக் ஹெவி கேம்களை விளையாடினாலும் கூட இது 90 நிமிடங்களுக்கு பிறகே ஹீட் ஆகிறது.

காரணம் 2 - வேற லெவல் பேட்டரி லைஃப் (Good Battery Life): இந்த ஸ்மார்ட்போனின் ஹைலைட்டே இதன் பேட்டரி தான். இது லேட்டஸ்ட் சிலிக்கான் கார்பன் பேட்டரியுடன் (Silicon Carbon battery) வருகிறது. இது நிலையான லித்தியம்-அயன் செல்களை (Standard Lithium-Ion cells) விட அதிக பவர் டென்சிட்டியை வழங்குகிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனால் அதிக சக்தியை சேமிக்க முடியும். பிசிமார்க் பேட்டரி டெட்ஸ்டில் இந்த ஸ்மார்ட்போன் 16 மணிநேரம் 41 நிமிடங்கள் எடுத்தது. இது 6,000mAh பேட்டரிகள் கொண்ட ஸ்மார்ட்போன்களை விட சிறந்த எண்ணிக்கையாகும்.

iQOO Z10 5G நம்பி வாங்க நச்சுனு 4 காரணங்கள்!

காரணம் 3 - ஸ்பீட் ஆன பாஸ்ட் சார்ஜிங் (Good Fast Charging): 30 நிமிட வீடியோ ஸ்ட்ரீமிங் சோதனையில், இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி வெறும் 1 சதவீதம் மட்டுமே குறைகிறது என்பது ஒருபக்கம் இருக்க, இதன் 90W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமானது (ரீடெயில் பாக்ஸ் உடன் 90W சார்ஜர் வருகிறது) வெறும் 42 நிமிடங்களில் 20 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்து அசத்துகிறது.

இது 4,000mAh க்கும் குறைவான பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களை விட மிகவும் வேகமானது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பைபாஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது, இது ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யப்படும் அதே நேரத்தில் பயன்பாட்டில் இருக்கும்போதும் மதர்போர்டை நேரடியாக இயக்குகிறது. இது பேட்டரியின் அழுத்தத்தை குறைக்கிறது, பேட்டரியின் ஆரோக்கியத்தை நீண்ட காலத்திற்கு சீராக வைக்கவும், பேட்டரியின் ஒட்டுமொத்த லைஃப்பை நீட்டிக்கவும் உதவுகிறது.

iQOO Z10 5G நம்பி வாங்க நச்சுனு 4 காரணங்கள்!

காரணம் 4 - வாவ் சொல்ல வைக்கும் வியூவிங் எக்ஸ்பீரியன்ஸ் (Good Display): இது FHD+ ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.77-இன்ச் குவாட்-கர்வ்டு AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது "விலைக்கு ஏற்ற" பிரைட் ஆன டிஸ்பிளேக்களில் ஒன்றாகும், இது நேரடி சூரிய ஒளியில் வெளியில் இருக்கும்போது கூட சிறந்த வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை (Viewing Experience) உறுதி செய்கிறது.

ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: இது டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவுடன் வருகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை 2392 x 1080 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 பிளஸ், 20:9 ஸ்க்ரீன் ரேஷியோ 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் வரையிலான எச்பிஎம், 5000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.77-இன்ச் எப்எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

iQOO Z10 5G நம்பி வாங்க நச்சுனு 4 காரணங்கள்!

சிப்செட்டை பொறுத்தவரை அட்ரெனோ 720 ஜிபியு உடனான 2.5GHz வரையிலான ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் மூலம் இயக்கப்படுகிறது. இது 128ஜிபி / 256ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ் உடனான 8ஜிபி / 12ஜிபி LPDDR4X ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான பன்டச்ஓஎஸ் 15 உடன் அனுப்பப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை இது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் சோனி IMX882 சென்சார், எப்/1.79 அபெர்க்ஷர் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 2எம்பி டெப்த் சென்சார் உள்ளன. இது ஆரா லைட், 30 fps 4கே வீடியோ ரெக்கார்ட்-ஐயும் ஆதரிக்கிறது. முன்பக்கத்தில் எப்/2.0 அபெர்க்ஷர் உடனான 32MP செல்பீ கேமரா (30 fps 4கே வீடியோ ரெக்கார்ட்) உள்ளது.

iQOO Z10 5G நம்பி வாங்க நச்சுனு 4 காரணங்கள்!

பேட்டரியை பொறுத்தவரை இது 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 7300mAh பேட்டரியை பேக் செய்கிறது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், இன்ப்ராரெட் சென்சார், யூஎஸ்பி டைப்-C ஆடியோ, பாட்டம்-போர்ட்டு ஸ்பீக்கர், இராணுவ தர MIL-STD-810H சான்றிதழ், தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி65 ஆகியவைகளை கொண்டுள்ளது,

மேலும் 5ஜி (SA / NSA), டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ax, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பெய்டு, யூஎஸ்பி டைப்-சி ஆகிய கனெக்டிவிட்டி விருப்பங்களையும் கொண்டுள்ளது. கடைசியாக இது அளவீட்டில் 7.92மிமீ மற்றும் எடையில் 199 கிராம் உள்ளது.

ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: இந்தியாவில் ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது க்ளேசியர் சில்வர் (Glacier Silver) மற்றும் ஸ்டெல்லர் பிளாக் (Stellar Black) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி மாடலின் விலை ரூ.21,999 என்றும், 8ஜிபி ரேம் + 256ஜிபி மாடலின் விலை ரூ.23,999 என்றும் மற்றும் டாப்-எண்ட் 12ஜிபி ரேம் + 256ஜிபி மாடலின் விலை ரூ.25,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஏற்கனவே அமேசான் இந்தியா (Amazon.in) மற்றும் ஐக்யூ இந்தியா இஸ்டோர் வழியாக வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
iQOO Z10 5G Review in Points 4 Reasons to Buy this 7300mAh Battery Smartphone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X