Home
Mobile

இப்போ ரூ.2000 விலை கம்மி.. இதை விட சீப்-ஆ எந்த 7300எம்ஏஎச் பேட்டரி 5ஜி போனும் கிடைக்காது.. எந்த மாடல்?

அறிமுகமான நேரத்திலேயே (ஏப்ரல் 2025).. இவ்ளோ கம்மி விலைக்கு 7300எம்ஏஎச் பேட்டரி (7300mAh Battery) கொண்ட 5ஜி ஸ்மார்ட்போனா என்று பலரையும் வாய் பிளக்க வைத்த ஐக்யூ இஸட்10 5ஜி (iQOO Z10 5G) ஸ்மார்ட்போன், தற்போது இன்னும் மலிவான வாங்க கிடைக்கிறது.

நினைவூட்டும் வண்ணம் ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.21,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.23,999 க்கும் மற்றும் டாப்-எண்ட் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டது.

இதை விட சீப்-ஆ எந்த 7300எம்ஏஎச் பேட்டரி 5ஜி போனும் கிடைக்காது!

தற்போது அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் ஆனது இந்த ஸ்மார்ட்போனின் அனைத்து ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மீதும் ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட்- ஐ (Rs.2000 Bank Discount) அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடியில் கீழ் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி மாடல் ரூ.21,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி மாடல் ரூ.23,999 க்கு பதிலாக ரூ.21,999 க்கும் மற்றும் டாப்-எண்ட் 12ஜிபி ரேம் + 256ஜிபி மாடல் ரூ.25,999 க்கு பதிலாக ரூ.23,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே:
- டூயல் சிம் (நானோ + நானோ)
- 2392 x 1080 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 பிளஸ், 20:9 ஸ்க்ரீன் ரேஷியோ 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் வரையிலான எச்பிஎம், 5000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.77-இன்ச் எப்எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே

ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் சிப்செட், ரேம், ஸ்டோரேஜ், ஓஎஸ்:
- அட்ரெனோ 720 ஜிபியு உடனான 2.5GHz வரையிலான ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம்
- 128ஜிபி / 256ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ் உடனான 8ஜிபி / 12ஜிபி LPDDR4X ரேம்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான பன்டச்ஓஎஸ் 15

ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா:
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- சோனி IMX882 சென்சார், எப்/1.79 அபெர்க்ஷர் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா
- எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 2எம்பி டெப்த் சென்சார்
- ஆரா லைட், 30 fps 4கே வீடியோ ரெக்கார்ட்
- எப்/2.0 அபெர்க்ஷர் உடனான 32MP செல்பீ கேமரா (30 fps 4கே வீடியோ ரெக்கார்ட்)

ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் பேட்டரி மற்றும் இதர அம்சங்கள்:
- 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 7300mAh பேட்டரி
- இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், இன்ப்ராரெட் சென்சார்
- யூஎஸ்பி டைப்-C ஆடியோ, பாட்டம்-போர்ட்டு ஸ்பீக்கர்
- இராணுவ தர MIL-STD-810H சான்றிதழ்
- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி65

- 5ஜி (SA / NSA)
- டூயல் 4ஜி வோல்ட்இ
- வைஃபை 6 802.11 ax
- ப்ளூடூத் 5.2
- ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பெய்டு, யூஎஸ்பி டைப்-சி
- அளவீட்டில் 7.92மிமீ
- எடையில் 199 கிராம்

ரூ.20,000 என்கிற பட்ஜெட்டில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை தேடுபவர்கள் ஐக்யூ இஸட் 10 5ஜி மாடலின் மீது கிடைக்கும் இந்த தள்ளுபடியை பயன்படுத்தி கொள்ளலாம். குறிப்பாக ஹெவி மொபைல் யூசர்கள் (அதாவது மொபைலை அதிக நேரம் பயன்படுத்துபவர்கள்), ஏனென்றால் இது அருமையான பேட்டரி லைஃப்பை தருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z10 5G gets Rs 2000 Bank Discount Now Available Under Rs 20000 in Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X