Home
Mobile

5000mAh பேட்டரி போன்களுக்கு டாட்டா.. Honor, Realme-ஐ தொடர்ந்து 10000mAh உடன் புது iQOO போன்!

சீன ஸ்மார்ட்போன் பிராண்டுகள் ஆனது பேட்டரி திறனை புதிய உச்சநிலைக்கு தள்ளுவதை தொடர்கின்றன. ஹானர் நிறுவனம் 10,080mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை வருகிற ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. ரியல்மி நிறுவனம் 10,001mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனில் பணியாற்றுவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதற்கிடையில் - இந்த "பிக் பேட்டரி ஸ்மார்ட்போன்" பட்டியலில் புதிதாக ஐக்யூ (iQOO) நிறுவனமும் சேர்ந்து இருப்பதாக தெரிகிறது. ஒரு புதிய லீக் தகவலின்படி, விவோ (Vivo) நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன ஐக்யூ - பெர்பார்மென்ஸ்-க்கு முக்கியத்துவம் தரும் ஸ்மார்ட்போன்களை விட மிகப்பெரிய பேட்டரிகளை கொண்ட ஸ்மார்ட்போன்களில் வேலை செய்கிறது.

5000mAh பேட்டரி போன்களுக்கு டாட்டா.. 10000mAh உடன் புது iQOO போன்!

நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்துள்ள தகவலின்படி, ஐக்யூ நிறுவனம் ஏற்கனவே 9,000mAh க்கு அருகிலான பேட்டரி கெப்பாசிட்டி கொண்ட ஒரு ஸ்மார்ட்போனை வெகுஜன உற்பத்திக்கு கொண்டு வந்துள்ளது. இன்னும் சுவாரஸ்யமாக, 10,000mAh பேட்டரி கொண்ட மற்றொரு மாடலும் மதிப்பீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும் சரியான வெளியீட்டு காலக்கெடு (லான்ச் டைம்லைன்) மற்றும் மாடல் பெயர்கள் குறித்த எந்த விவரங்களும் இல்லை. தொழில்துறை முழுவதும், குறிப்பாக சீனாவில், பேட்டரி அளவுகள் எவ்வளவு விரைவாக வளர்ந்து வருகின்றன என்பதையும் டிப்ஸ்டர் சுட்டிக்காட்டினார். 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும் பிக் ஸ்க்ரீன் கொண்ட ஸ்மார்ட்போன்கள் குறைந்தபட்சம் 8,000mAh பேட்டரிகளுடன் தரநிலையாக அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் ஸ்க்ரீன் மாடல்களுக்கு "அடுத்ததாக" உள்ள பிளாக்ஷிப் மாடல்கள் 9000mAh பேட்டரியை நோக்கி நகரக்கூடும், அதே நேரத்தில் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள் ஆனது தற்போதைய பிரீமியம் ஸ்மார்ட்போன்களை விட குறிப்பிடத்தக்க நீண்ட பேட்டரி லைஃப்பை வழங்க இன்னும் அதிகமான பேட்டரி கெப்பாசிட்டிக்கு செல்லக்கூடும்.

முன்னரே குறிப்பிட்டபடி ஹானர் பவர் 2 (Honor Power 2) ஸ்மார்போன் ஆனது வருகிற ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. பேட்டரி லைஃப் மற்றும் ஸ்ட்ரீமிங் டைமை பற்றி அதிகம் அக்கறை கொண்ட ஸ்மார்ட்போன் பயனர்கள் ஹானர் பவர் 2 மாடலுக்காக காத்திருக்கலாம். இது ஜனவரி 5 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது 10,080mAh பேட்டரியுடன் வரும். ஆனால் இந்திய அறிமுகம் குறித்து எந்த விவரங்களும் இல்லை

இதே டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த மற்றொரு சமீபத்திய தகவலின்படி RMX5107 என்கிற மாடல் நம்பர் கொண்ட ஒரு புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் 10,001mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படலாம். இது ரியல்மி பவர் (Realme Power) என்கிற பிராண்டிங் பெயரை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த ஸ்மார்ட்போன் சுமார் 219 கிராம் எடையுள்ளதாக இருக்கும் என்றும் சில்வர், ஆரஞ்சு மற்றும் ப்ளூ ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் டிசிஎஸ் குறிப்பிட்டுள்ளார். ரியல்மி பவர் ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட லேட்டஸ்ட் ரியல்மி யுஐ 7, குறைந்தபட்சம் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆகிய அம்சங்களையும் பேக் செய்யலாம்.

9000mAh பேட்டரி கொண்ட ஒன்பிளஸ் டர்போ 6 (OnePlus Turbo 6): ஒன்பிளஸ் டர்போ 6 (OnePlus Turbo 6) மற்றும் டர்போ 6வி (Turbo 6V) ஆகிய மாடல்களை உள்ளடக்கிய இந்த சீரீஸ் ஜனவரி 8 ஆம் தேதி சீனாவில் சீனாவில் அறிமுகமாக உள்ளது. பின்னர் இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் ஒன்பிளஸ் நோர்ட் பிராண்டிங்கின் கீழ் அறிமுகம் செய்யப்படலாம். ஸ்டாண்டர்ட் மாடல் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட், 165 ஹெர்ட்ஸ் மற்றும் 1.5கே டிஸ்பிளேவுடன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 80W வயர்டு மற்றும் 27W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 9,000mAh பேட்டரியை கொண்டிருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Working on new smartphones with 9000mAh and 10000mAh Battery Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X