Home
Mobile

iQOO அசத்தல்.. ரூ.19,000 பட்ஜெட்ல புது Phone-ஐ லான்ச் பண்ண வேகத்துல 8000mAh பேட்டரி உடன் இன்னொரு மாடல்!

ரூ.19,499 க்கு ஐக்யூ இஸட்10ஆர் 5ஜி (iQOO Z10R 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமான வேகத்தில் இதே இஸட்10 சீரிஸின்.. 8000எம்ஏஎச் பேட்டரி உடன் வரும் அடுத்த மாடல் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. என்ன மாடல்? எப்போது அறிமுகமாகும்? வேறு என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்?

என்ன மாடல்? அது ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் (iQOO Z10 Turbo Pro Plus) ஸ்மார்ட்போனாகும். இது இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகம் செய்யப்படும் என்றும், தற்போதுள்ள ஐக்யூ இஸட்10 டர்போ சீரீஸில் உள்ள ஸ்மார்ட்போன்களின் சில அம்சங்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

iQOO அசத்தல்.. 8000mAh பேட்டரி உடன் இன்னொரு மாடல்!

நினைவூட்டும் வண்ணம் ஐக்யூ இஸட்10 டர்போ (iQOO Z10 Turbo) மற்றும் ஐக்யூ இஸட்10 டர்போ (iQOO Z10 Turbo Pro) ஸ்மார்ட்போன்கள் ஆனது கடந்த ஏப்ரல் மாதத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ஸ்மார்ட்போன்கள் முறையே 7620mAh மற்றும் 7,000mAh பேட்டரியை பேக் செய்கின்றன.

ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிஸ்பிளே வை பொறுத்தவரை இது 144ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 4400 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.78-இன்ச் 1.5கே அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்

சிப்செட்டை பொறுத்தவரை இது 16ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9400பிளஸ் (Octa-core MediaTek Dimensity 9400+ SoC) சிப்செட்டை பேக் செய்யலாம். இது சிங்கிள்-கோர் மற்றும் மல்டி-கோர் சோதனைகளில் முறையே 2,916 மற்றும் 8,907 புள்ளிகளை பெற்று உள்ளது

கேமராக்களை பொறுத்தவரை ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 50 மெகாபிக்சல் சோனி LYT-600 ப்ரைமரி ரியர் கேமராவை கொண்டிருக்கலாம். கூடவே இது 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டரையும் பேக் செய்யலாம். முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டிருக்கலாம்.

ஆண்ட்ராய்டு 15 (Android 15) அடிப்படையிலான ஒரிஜின்ஓஎஸ் (OriginOS) உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படும் ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது முன்னரே குறிப்பிட்டபடி மிகப்பெரிய 8,000mAh பேட்டரியை பேக் செய்யலாம். இது 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடன் அனுப்பி வைக்கப்படலாம்.

இன்று (ஜூலை 24) இந்தியாவில் அறிமுகமான ஐக்யூ இஸட்10ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.19,499
8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.21,499
12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.23,499

ஐக்யூ இஸட்10ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது Aquamarine மற்றும் Moonstone ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வருகிற ஜூலை 29 ஆம் தேதி முதல் அமேசான் இந்தியா (Amazon India) மற்றும் ஐக்யூ இந்தியா இ-ஸ்டோர் (iQOO India e-store) வழியாக விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்யூ இஸட்10ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ) ஆதரவு
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.77-இன்ச் FHD+ குவாட் கர்வ்டு AMOLED டிஸ்பிளே
- 12ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 7400 (MediaTek Dimensity 7400) சிப்செட்

- OIS ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி IMX882 ப்ரைமரி சென்சார் + 2-மெகாபிக்சல் பொக்கே ஷூட்டர்
- 4K வீடியோ பதிவுக்கான ஆதரவுடன் 32-மெகாபிக்சல் செல்பீ சென்சார்
- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68+IP69 ரேட்டிங்
- 5,700mAh பேட்டரி
- 44W சார்ஜிங் ஆதரவு (Fast Charging Support)

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Working on 8000mAh Battery Smartphone Could be iQOO Z10 Turbo Pro Plus Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X