அறிமுகம் ஆச்சுனா மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் இதுதான்: ஐக்யூ யூ3எக்ஸ் அம்சங்கள் இதுவா?
ஐக்யூ நிறுவனம் நியோ தொடரில் ஐக்யூ நியோ 5 எனப்படும் புதிய கேமிங் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த பிராண்ட் தற்போது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. தற்போது ஐக்யூ நிறுவனம் பணியாற்றி வரும் புது ஸ்மார்ட்போனானது இசட் மோனிகர், இசட்3-ன் கீழ் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐக்யூ பிராண்டட் ஸ்மார்ட்போனானது ஐக்யூ யூ3எக்ஸ் என அழைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இதுகுறித்த சமீபத்திய அறிக்கையின்படி, இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இந்த ஐக்யூ யூ3எக்ஸ் ஸ்மார்ட்போன் குறித்த கசிந்த அம்சங்களை பார்க்கலாம்.

ஐக்யூ யூ3எக்ஸ் குறித்து வெளியான கசிந்த அம்சங்களை பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் முக்கிய அம்சங்கள் குறித்து சீன டிப்ஸ்டர் ஆன்லைன் தளத்தில் தகவல்கள் கசிந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நுழைவு நிலை செயலியில் இயங்கும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 480 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனின் ரேம் மற்றும் சேமிப்பு திறன் குறித்த தகவல் வெளியாகவில்லை. இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் செயலி 5ஜி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் டிப்ஸ்டர் குறித்த தகவலின்படி இந்த ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வரும் என கூறப்படுகிறது. டிஸ்ப்ளே குறித்த பிற தகவல்கள் எதுவும் தற்போதுவரை வெளியாகவில்லை. ஐக்யூ யூ3எக்ஸ் இரட்டை லென்ஸ் கேமரா வடிவமைப்புடன் வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐக்யூ யூ3எக்ஸ் ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 13 எம்பி முதன்மை கேமராவுடன் வரும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2 எம்பி சென்சாருடன் வரும் தகவல்கள் தெரிவிக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படும் எனவும் வேகமான சார்ஜிங் ஆதரவோடு இந்த ஸ்மார்ட்போன் வருமா என்ற தகவல்கள் வெளியாகவில்லை. அதேபோல் ஐக்யூ யூ3எக்ஸ் ஸ்மார்ட்போனானது இந்திய விலைப்படி ரூ.11,129 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது.

தகவலின்படி இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் இந்தியாவில் கிடைக்கும் மலிவு விலை 5ஜி சாதனமாக இது இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. நிறுவனம் சார்ந்து வெளியான தகவலின்படி ஐக்யூ யூ3எக்ஸ் சாதனத்தை இந்தியா மற்றும் பிற நாடுகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சீன சந்தையின் வெளியீட்டு தேதியை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் ஐக்யூ யூ3எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஐக்யூ இசட் 3 ஸ்மார்ட்போன் உடன் இந்தாண்டு மார்ச் இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் பரவியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனானது விவோ ஒய்31 சாதனத்தின் மறுபெயரிட்ட பதிப்பாக இருக்கும் என ஆன்லைன் தகவல்கள் தெரிவிக்கின்றன. 5ஜி இணைப்புடன் இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. விவோ ஒய்31 ஸ்மார்ட்போன் மறுபெயரிட்ட பதிப்பாக யூ3எக்ஸ் இருக்கும் என கூறப்படுகிறது.
File Images


Click it and Unblock the Notifications