பட்ஜெட் விலையில் அறிமுகமான ஐக்யூ யூ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன்.! என்னென்ன அம்சங்கள்.!
ஐக்யூ நிறுவனம் புதிய ஐக்யூ யூ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ஸ்னாப்டிராகன் 480 சிப்செட், டூயல் ரியர் கேமராக்கள், 5000 எம்ஏஎச் பேட்டரி என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. விரைவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஐக்யூ யூ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

1080 x 2408 பிக்சல் தீர்மானம்
ஐக்யூ யூ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2408 பிக்சல் தீர்மானம், 20:07:9 என்ற திரைவிகிதம், 90Hz refresh rate மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 480 சிப்செட்
ஐக்யூ யூ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் தரமான ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த அசத்தலான ஸ்மார்போன் மாடல். மேலும் iQoo 1.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சிறந்த வடிவமைப்புடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

ஐக்யூ யூ3எக்ஸ் 5ஜி கேமராக்கள்
இந்த புதிய ஐக்யூ யூ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு வீடியோ கால் அழைப்பு வசதிக்கு என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

5000 எம்ஏஎச் பேட்டரி
ஐக்யூ யூ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. யா கிரே மற்றும் மேஜிக் ப்ளூ நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த புதிய ஐக்யூ யூ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன்.

டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, புளூடூத் 5.0, ஜி.பி.எஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்

ஐக்யூ யூ3எக்ஸ் 5ஜி விலை
இந்திய மதிப்பில்..
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ யூ3எக்ஸ் 5ஜி விலை ரூ.13,350-ஆக உள்ளது.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ யூ3எக்ஸ் 5ஜி விலை ரூ.13,350-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ யூ3எக்ஸ் 5ஜி விலை ரூ.16,700-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications