அசத்தலான அம்சங்களுடன் ஐக்யூ யூ3எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஐக்யூ நிறுவனம் புதிய ஐக்யூ யூ3எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக மீடியாடெக் சிப்செட், டூயல் ரியர் கேமராக்கள், 5000 எம்ஏஎச் பேட்டரி என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஐக்யூ யூ3எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

ஐக்யூ யூ3எக்ஸ் 4ஜி
ஐக்யூ யூ3எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.51-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1600 x 720பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்தஅட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

iQoo 1.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்
ஐக்யூ யூ3எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போனில் தரமான மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த அசத்தலான ஸ்மார்போன் மாடல். மேலும் iQoo 1.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சிறந்த வடிவமைப்புடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

இந்த புதிய ஐக்யூ யூ3எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு வீடியோ கால் அழைப்பு வசதிக்கு என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

5000 எம்ஏஎச் பேட்டரி
ஐக்யூ யூ3எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. Morning Frost மற்றும்Light Black நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த புதிய ஐக்யூ யூ3எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன்.

டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, புளூடூத் 5.0, ஜி.பி.எஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் 191 கிராம் எடைகொண்டுள்ளது இந்த ஐக்யூ யூ3எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.10,250-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications