Home
Mobile

விரைவில் 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் iQOO U1x ஸ்மார்ட்போன்.!

விவோ நிறுவனத்தின் துணை நிறுவனமான ஐக்யூ ஒரு புதிய ட்ரிபிள் ரியர் கேமரா ஸ்மார்ட்போனை iQOO U1x என்கிற பெயரின் கீழ் அறிமுகம் செய்யவுள்ளது. மேலும் இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதம் iQOO U1 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போனின் சில

குறிப்பாக iQOO U1x ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் சீன சில்லறை விற்பனையாளர் வலைத்தளமான ஜே.டி.காமில் வெளியாகியுள்ளன. அதன்படி iQOO U1x ஸ்மார்ட்போன் ஆனது வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பு, செங்குத்தாக சீரமைக்கப்பட்ட மூன்று பின்புற கேமராக்கள், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் பல அம்சங்களை கொண்டிருக்கும்.

ஸ்மார்ட்போன் லைட் பிளாக்

பின்பு இந்த ஸ்மார்ட்போன் லைட் பிளாக் மற்றும் மார்னிங் ஃப்ரோஸ்ட் வண்ண விருப்பங்களில் கிடைக்கும். குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 ப்ராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு iQOO U1x ஸ்மார்ட்போன் வெளிவருவதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மூன்று ஸ்டோரேஜ் வகைகளில்

வெளிவந்த தகவல்களின்படி விரைவில் சினாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும். அதன்பிறகு தான் இந்தியாவில் இந்த சாதனம் அறிமுகமாகும். மேலும் ஐக்யூ U1x ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி, மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி என்கிற மூன்று ஸ்டோரேஜ் வகைகளில் கிடைக்கும்.

களமிறங்கும்

iQOO U1x ஸ்மார்ட்போன் ஆனது 5000எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும். மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் களமிறங்கும்.

ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகம்

கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஐக்யூ U1 ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் அளவிலான புல் எச்டி + டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும் இது 2340 x 1080 பிக்சல்கள் அளவிலான ஸ்க்ரீன் ரெசல்யூஷன், 19: 5: 9 என்கிற அளவிலான திரை விகிதம் மற்றும் 90.72 சதவீத ஸ்க்ரீன் டூ பாடி விகிதம் ஆகியவைகளையும் கொண்டுள்ளது.

iQOO U1 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி ப்ராசஸர் மற்றும் அட்ரினோ 618 ஜி.பீ.யு வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டு இயங்குகிறது.

என மூன்று கேமராக்கள்

iQOO U1 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது, இது டிஸ்பிளேவின் பஞ்ச்-ஹோல் கட்அவுட்டில் வைக்கப்பட்டுள்ளது மற்றும் இது டிஸ்பிளேவின் மேல் இடது மூலையில் அமைந்துள்ளது.

 மொத்த அமைப்பும் ஒரு

ஐக்யூ U1 ஸ்மார்ட்போனின் மொத்த அமைப்பும் ஒரு 4,500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும் இது 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

4ஜி வோல்டிஇ, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ்,

வைஃபை, 4ஜி வோல்டிஇ, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், க்ளோனாஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், டூயல் சிம் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஐக்யூ U1 ஸ்மார்ட்போன். கடைசியாக இது அளவீட்டில் 162.05 x 76.61 x 8.46 மிமீ மற்றும் 190 கிராம் எடையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
iQOO U1x renders and key specs surface online and More Details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X