Home
Mobile

டாப் கியரில் பறக்கும் iQOO.. 7620mAh பேட்டரி, 90W சார்ஜிங் உடன் புது போன்.. ஏப்.28 இல் அறிமுகம்.. என்ன மாடல்?

நாங்க இப்போதைக்கு நிறுத்துறதா இல்லீங்க.. என்று கூறும்படியாக ஐக்யூ நிறுவனம் அதன் இஸட்10 சீரிஸின் மேலும் 2 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளதை ஐக்யூ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மிகவும் சமீபத்தில் தான் இஸட்10 சீரீஸின் கீழ் ஐக்யூ இஸட்10 5ஜி (iQOO Z10 5G) மற்றும் ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி (iQOO Z10x 5G) ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.

அடுத்தது என்னென்ன மாடல்கள்? ஐக்யூ நிறுவனம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி அன்று, சீனாவில் வெளியீட்டு நிகழ்வு ஒன்றை நடத்த உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. ஐக்யூவின் அதிகாரப்பூர்வ சேனல்கள் மற்றும் போஸ்டர்கள் மூலம் பகிரப்பட்ட விவரங்களின்படி, குறிப்பிட்ட நாளில் 3 புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும்.

7620mAh பேட்டரி உடன் புது iQOO போன்.. ஏப்.28 இல் அறிமுகம்!

ஐக்யூ இஸட்10 டர்போ (iQOO Z10 Turbo) மற்றும் ஐக்யூ இஸட்10 டர்போ ப்ரோ (iQOO Z10 Turbo Pro) ஆகிய மாடல்களுடன் இணைந்து இந்தியாவில் அறிமுகமான ஐக்யூ இஸட்10எக்ஸ் (iQOO Z10x) மாடலும் சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆனால் டர்போ மாடல்கள் ஆனது ரெட்மி டர்போ 4 (Redmi Turbo 4) சீரீஸ்-க்கு போட்டியாக வடிவமைக்கப்பட்ட புத்தம் புதிய ஸ்மார்ட்போன்களாக இருக்கும்.

ஐக்யூ இஸட்10 டர்போ சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஐக்யூ இஸட்10 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது புதிய ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட்டால் இயக்கப்படும் முதல் டிவைஸ்களில் ஒன்றாக இருக்கும். இந்த சிப் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 மற்றும் மீடியாடெக் டைமன்சிட்டி 9300 பிளஸ் சிப்செட்டை விட சிறப்பாக செயல்படும் என்று கூறப்படுகிறது.

மறுகையில் உள்ள ஸ்டாண்டார்ட் ஐக்யூ இஸட்10 டர்போ ஸ்மார்ட்போனானது டைமன்சிட்டி 8400 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படலாம். ஒப்பிடுகையில், ரெட்மி டர்போ 4 மற்றும் ரெட்மி 4 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் முறையே டைமன்சிட்டி 8400 மற்றும் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 சிப்செட்களால் இயக்கப்படுகின்றன.

மேலும் கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின்படி, இஸட்10 டர்போ ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் 1.5கே 144ஹெர்ட்ஸ் OLED LTPS பிளாட் டிஸ்பிளே மற்றும் ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் ரீடர் ஆகியவற்றை கொண்டிருக்கும். மேலும் இது 90W சார்ஜிங் கொண்ட 7620mAh பேட்டரி மற்றும் 50 மெகாபிக்சல் (OIS) + 2 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப்பையும் பேக் செய்யும்

மறுகையில் உள்ள ப்ரோ வேரியண்ட் ஆனது 120W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 7000mAh பேட்டரி மற்றும் 50 மெகாபிக்சல் (OIS) + 8 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். வடிவமைப்பை பொறுத்தவரை ஐக்யூ இஸட்10 டர்போ சீரிஸ் ஆனது இஸட்9 டர்போ சீரிஸில் காணப்பட்டதை விட ஒரு மிகவும் க்ளீன் ஆன வெர்ஷன்களாக தெரிகிறது.

ஐக்யூ இஸட்10 டர்போ சீரிஸ் ஆனது ஸ்டாரி பிளாக், டெசர்ட், பர்ன் ஆரஞ்சு மற்றும் கிளவுட் ஒயிட் ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கும் என்பதை ஐக்யூ பிராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சீரீஸ் சீனாவில் இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.25,000 - ரூ.30,000 க்குள் என்கிற விலை வரம்பில் அறிமுகம் செய்யப்படலாம். இந்திய அறிமுகம் குறித்து எந்த தகவலும் இல்லை.

இந்தியாவில் அறிமுகமான ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது க்ளேசியர் சில்வர் (Glacier Silver) மற்றும் ஸ்டெல்லர் பிளாக் (Stellar Black) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி மாடலின் விலை ரூ.21,999 என்றும், 8ஜிபி ரேம் + 256ஜிபி மாடலின் விலை ரூ.23,999 என்றும் மற்றும் டாப்-எண்ட் 12ஜிபி ரேம் + 256ஜிபி மாடலின் விலை ரூ.25,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஏற்கனவே அமேசான் இந்தியா (Amazon.in) மற்றும் ஐக்யூ இந்தியா இஸ்டோர் வழியாக வாங்க கிடைக்கிறது.

இந்தியாவில் அறிமுகமான ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.13,499 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.14,999 க்கும் மற்றும் டாப்-எண்ட் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.16,499 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அல்ட்ராமரைன் மற்றும் டைட்டானியம் ஆகிய 2 கலர்களில் அமேசான் இந்தியா (Amazon.in) மற்றும் ஐக்யூ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளமான ஐக்யூ இந்தியா இஸ்டோர் (iQOO India eStore) வழியாக வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
iQOO to Launch 2 More Big Battery Phones iQOO Z10 Turbo iQOO Z10 Turbo Pro in April 28
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X