பிப்.14 குள்ள வாங்கினால்.. ரூ.4,000 - ரூ.14,000 டிஸ்கவுண்ட்.. அடிமட்ட விலையில் 6 iQOO 5G போன்கள்!
அமேசான், பிளிப்கார்ட் ஆகிய இ-காமர்ஸ் தளங்களை தொடர்ந்து.. ரியல்மி இந்தியா, ஒன்பிளஸ் இந்தியா ஆகிய வலைத்தளங்களை ஐக்யூ இந்தியா வலைத்தளமும் 2025 ஆம் ஆண்டு காதலர் தின சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இன்று (பிப்.11) முதல் பிப்.14 வரை நடக்கும் ஐக்யூ க்வெஸ்ட் டேஸ் சேல் (iQOO Quest Days Sale 2025) விற்பனையின் கீழ் ஆறு 5ஜி மாடல்கள் மீது அபார தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
01. ஐக்யூ 13 5ஜி (iQOO 13 5G): இந்த ஸ்மார்ட்போனின் எம்ஆர்பி விலை ரூ.61,999 ஆகும். இருப்பினும் தற்போது ரூ.54,999 என்கிற சலுகை விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. வங்கிச் சலுகையை பொறுத்தவரை தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளில் ரூ.2,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது.

02. ஐக்யூ இஸட்9எஸ் 5ஜி (iQOO Z9s 5G): இந்த ஸ்மார்ட்போனின் எம்ஆர்பி விலை ரூ.25,999 ஆகும். இருப்பினும் தற்போது ரூ.19,999 என்கிற சலுகை விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. ரூ.500 கூப்பன் தள்ளுபடியுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளில் ரூ.2,000 வரையிலான வங்கி தள்ளுபடியும் கிடைக்கிறது.
03. ஐக்யூ இஸட்9 லைட் 5ஜி (iQOO Z9 Lite 5G): இந்த ஸ்மார்ட்போனின் எம்ஆர்பி விலை ரூ.15,499 ஆகும். இருப்பினும் தற்போது ரூ.11,499 என்கிற சலுகை விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. ரூ.250 கூப்பன் தள்ளுபடியுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளில் ரூ.2,000 வரையிலான வங்கி தள்ளுபடியும் கிடைக்கிறது.
04. ஐக்யூ இஸட்9எக்ஸ் 5ஜி (iQOO Z9x 5G): இந்த ஸ்மார்ட்போனின் எம்ஆர்பி விலை ரூ.17,999 ஆகும். இருப்பினும் தற்போது ரூ.11,999 என்கிற சலுகை விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. ரூ.500 கூப்பன் தள்ளுபடியுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளில் ரூ.2,000 வரையிலான வங்கி தள்ளுபடியும் கிடைக்கிறது.
05. ஐக்யூ இஸட்7 ப்ரோ 5ஜி (iQOO Z7 Pro 5G): இந்த ஸ்மார்ட்போனின் எம்ஆர்பி விலை ரூ.27,999 ஆகும். இருப்பினும் தற்போது ரூ.19,999 என்கிற சலுகை விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. வங்கிச் சலுகையை பொறுத்தவரை தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளில் ரூ.2,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது.
06. ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G): இந்த ஸ்மார்ட்போனின் எம்ஆர்பி விலை ரூ.64,999 ஆகும். இருப்பினும் தற்போது ரூ.50,999 என்கிற சலுகை விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. ரூ.1000 கூப்பன் தள்ளுபடியுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளில் ரூ.2,000 வரையிலான வங்கி தள்ளுபடியும் கிடைக்கிறது.
ரூ.54,999 க்கு ஐக்யூ 13 5ஜி வாங்க கிடைக்கும் வேளையில், பழைய ஐக்யூ 12 5ஜி மாடலை நம்பி வாங்கலாமா? இந்த கேள்விக்கான பதில் இவ்விரு ஸ்மார்ட்போன்களையும் ஒப்பிட்டு பார்த்தால் மட்டுமே கிடைக்கும். ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் குவாட்-எச்டி LTPO AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது
சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப் உடன் 16ஜிபி வரையிலான LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான UFS 4.0 ஸ்டோரேஜை கொண்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, 50எம்பி ஆஸ்ட்ரோகிராஃபி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா + 100எக்ஸ் டிஜிட்டல் ஜூமிங் உடனான 64எம்பி 3எக்ஸ் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவை கொண்டுள்ளது. இதன் ப்ரைமரி கேமரா மற்றும் டெலிஃபோட்டோ கேமரா ஆகிய இரண்டுமே சூப்பர் மூன்மோட்-ஐ தரிக்கின்றன.
ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போனின் முன்பக்ககேமராவை பொறுத்தவரை - 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. இதுதவிர்த்து ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அண்டர் டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், 120W பிளாஷ்சார்ஜ் ஆதரவு உடன் 5000mAh பேட்டரி, தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது.
புதிய ஐக்யூ 13 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.82-இன்ச் 2K LTPO AMOLED டிஸ்பிளே, தற்போதைக்கு குவால்காமின் லேட்டஸ்ட் சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப், 12ஜிபி வரையிலான LPDDR5X அல்ட்ரா ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான UFS 4.1 ஸ்டோரேஜ்-ஐ கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, ஐக்யூ 13 ஸ்மார்ட்போனில் மூன்று 50எம்பி கேமராக்கள் (ப்ரைமரி + அல்ட்ரா வைட் + டெலிஃபோட்டோ), முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது. கடைசியாக இது 120W பிளாஷ்சார்ஜ் ஆதரவு உடனான சற்றே பெரிய 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. ரூ.50,999 க்கு பழைய ஐக்யூ 12 5ஜி மாடலை வாங்குவதற்கு பதிலாக, கூடுதலாக ரூ.4000 செலவு செய்து ஐக்யூ 13 5ஜி மாடலை வாங்குவதே புத்திசாலித்தனம்.


Click it and Unblock the Notifications








