நீங்கள் செய்தது நியாயமா.. iQOO-வை பார்த்து கதறும் OnePlus.. காரணம் இந்த புது 5ஜி போன்.. ஏன்? எந்த மாடல்?
ஐக்யூ (iQOO) நிறுவனமானது.. ஒன்பிளஸ் 15-க்கு போட்டியாக ஐக்யூ 15, ஒன்பிளஸ் 15ஆர்-க்கு போட்டியாக ஐக்யூ 15ஆர் மாடலை கொண்டு வருவது என.. வெறுமனே ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்திற்கு போட்டியாக அதன் புதிய ஸ்மார்ட்போன்களை களமிறக்கும் நிறுவனம் அல்ல என்பதை நிரூபித்து உள்ளது.
செய்ய முடியாதுனு சொன்ன ஒன்பிளஸ்: கடந்த ஆண்டு, 2கே டிஸ்ப்ளேவை 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் இணைப்பது சாத்தியமில்லை என்று ஒன்பிளஸ் நிறுவனம் கூறி இருந்தது. 165ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட்டை தாங்கக்கூடிய 2கே ஓஎல்இடி டிஸ்பிளேவை எந்த டிஸ்பிளே உற்பத்தியாளரும் இதுவரை உருவாக்கவில்லை என்றும், 1.5கே மட்டுமே சாத்தியமான ஒரே வழி என்றும் ஒன்பிளஸ் சீனாவின் தலைவர் லி ஜியே விளக்கி இருந்தார்.

அந்த சமரசத்துடன் தான் ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போனும் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும் 1.5கே டிஸ்பிளேவை கொண்டுள்ளது. அந்த நேரத்தில் தொழில்துறையில் கிடைக்கும் பெஸ்ட் டிஸ்பிளே இதுதான் யாரும் ஒன்பிளஸ் நிறுவனம் பெருமையாக கூறி இருந்தது.
செய்து காட்டிய ஐக்யூ: நம்பகமான சைனீஸ் டிப்ஸ்டர் ஆன டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த லேட்டஸ்ட் லீக்கின்படி, வரவிருக்கும் ஐக்யூ நியோ 12 (iQOO Neo 12) ஸ்மார்ட்போனில், 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட 2கே டிஸ்பிளே இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2கே ரெசல்யூஷனை 185ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் இணைக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது
இது அவ்வளவு பெரிய விஷயமா? இது ஏன் உண்மையிலேயே ஒரு பெரிய விஷயம் என்பதை புரிந்துகொள்ள, ஒரு சிறிய பின்னணி உதவும். தற்போது, சந்தையில் பெருமளவில் தயாரிக்கப்படும் பெஸ்ட் 2கே டிஸ்பிளேக்கள் அதிகபட்சமாக 144ஹெர்ட்ஸ் வரை மட்டுமே இயங்குகின்றன. இதை விட அதிகமான ரெஃப்ரெஷ் ரேட் என்பது ரெசல்யூஷனை குறைக்கும் ஒரு விஷயமாகும், இதைத்தான் ஒன்பிளஸ் நிறுவனம் சமரசம் செய்துகொண்டது.
"ஒளிரும் பொருட்கள் மற்றும் சர்க்யூட் தொழில்நுட்பத்தில் உள்ள வரம்புகள் காரணமாக, 165ஹெர்ட்ஸ் + 2கே ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் அடைய தற்போது தொழில்துறையால் முடியவில்லை" என்று ஒன்பிளஸ் கூறி இருந்தது. இருப்பினும் ஐக்யூ நிறுவனத்திடம் இப்போது அதை செய்து முடிக்கும் பொறியியல் திறன் இருப்பதாக தெரிகிறது.
லீக் ஆன தகவலின்படி, ஐக்யூ நியோ 12 ஸ்மார்ட்போனின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவானது 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை மட்டும் இலக்காக கொள்ளவில்லை. அவர்கள் இன்னும் தீவிரமான 185 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ட்யூனிங் மோடையும் (Tuning Mode) பரிசோதித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனாலும் இது சந்தையில் அறிமுகமாகும் முதல் 185ஹெர்ட்ஸ் போனாக இருக்காது. ஆசஸ் நிறுவனத்தின் 2024 ஆர்ஓஜி போன் 9 ப்ரோ ஆனது 185ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை கொண்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் அது 1080பி ரெசல்யூஷனை மட்டுமே கொண்டுள்ளது. ஐக்யூவின் 185ஹெர்ட்ஸ் மற்றும் 2கே ரெஃப்ரெஷ் ரேட் காம்பினேஷன் ஆனது (குறைந்தபட்சம் கேமிங் போன்களுக்கு) 2026-ஆம் ஆண்டின் டிஸ்பிளேக்கான ஒரு அளவுகோலாக அமையும் என்பது போல் தெரிகிறது.
டாக்டிகல் ஷூட்டர்ஸ் போன்ற வேகமான கேம்களில், அதிக ரெஃப்ரெஷ் ரேட் என்பது ஸ்மூத் ஆக குறி வைப்பது, எதிரிகளை தெளிவாகக் கண்காணிப்பது மற்றும் வேகமான அசைவுகளின் போதும் டியர்-ப்ரீ ஸ்க்ரீனை வழங்குவது ஆகியவற்றை உறுதி செய்யும். ஐக்யூ நியோ 12 ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அதிகாரப்பூர்வ வெளியீடு 2025-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் நடக்கலாம். Photo Courtesy: Gizmochina


Click it and Unblock the Notifications