Amazon அட்டகாசம்.. அறிமுகமாகி 1 மாசம் கூட ஆகாத 6500mAh பேட்டரி, 5G போன் மீது டிஸ்கவுண்ட்.. என்ன மாடல்?
அமேசான் அட்டகாசம் பண்ணுது என்றே கூறலாம். தற்போது நடந்து கொண்டு இருக்கும் அமேசான் கிரேட் சம்மர் சேல் 2025-ன் (Aamzon Great Summer Sale 2025) ஒரு பகுதியாக.. கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி அறிமுகமான ஒரு பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன் மீது.. அதாவது அறிமுகம் செய்யப்பட்டு முழுதாக 1 மாதம் கூட ஆகாத ஒரு ஸ்மார்ட்போன் மீது டிஸ்கவுன்ட்டை அறிவித்துள்ளது.
அதென்ன மாடல்? அது ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி (iQOO Z10x 5G) ஸ்மார்ட்போனாகும். நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி தான் தொடங்கியது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் மீது ரூ.500 மல்டி பேங்க் கிரெடிட் கார்டு ஆபர் (MULTIBANK Credit Card Offer) அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரூ.13,499 என்கிற பட்ஜெட் விலையில் வாங்க கிடைக்கும் ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மீதான இந்த ரூ.500 தள்ளுபடி, இதன் விலையை இன்னும் குறைத்து, ரூ.12,999 ஆக மாற்றி, இதை இன்னும் மலிவான ஸ்மார்ட்போனாக மாற்றுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.13,499 க்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இதே ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.14,999 க்கும் மற்றும் டாப்-எண்ட் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.16,499 க்கும் அறிமுகம் செய்யப்பட்டது. அமேசான் அறிவித்துள்ள இந்த ரூ.500 பேங்க் டிஸ்கவுண்ட் மேற்கண்ட 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மீதும் கூட கிடைக்கிறது. ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அல்ட்ராமரைன் மற்றும் டைட்டானியம் ஆகிய 2 கலர்களில் வாங்க கிடைக்கிறது.
ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள் (iQOO Z10x 5G Full Specifications):
- டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு
- 2408 × 1080 பிக்சல்ஸ் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 1050 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ்
- 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
- மாலி-ஜி615 எம்சி2 ஜிபியு
- 2.5GHz வரையிலான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் சிப்செட்
- 6ஜிபி / 8ஜிபி LPDDR4x ரேம்
- 128ஜிபி / 256ஜிபிசி UFS 3.1 ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான பன்டச்ஓஎஸ் 15 (FunTouch OS 15)
- டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup)
- எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 2எம்பி டெப்த் சென்சார், - எல்இடி ஃபிளாஷ், 4கே வீடியோ பதிவு ஆதரவு
- எப்/2.05 அபெர்க்ஷர் உடனான 8எம்பி செல்பீ கேமரா
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இன்ப்ராரெட் சென்சார் (Infrared Sensor)
- 44W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 6500mAh பேட்டரி
- இராணுவ தர MIL-STD-810H சான்றிதழ்
- ஐபி64 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு திறன்
- 5ஜி (NSA) மற்றும் 4ஜி வோல்ட்இ (4G VoLTE)
- வைஃபை 6 802.11 ax (2.4GHz + 5GHz)
- ப்ளூடூத் 5.4
- ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பெய்டு, யூஎஸ்பி டைப்-சி 2.0
- யூஎஸ்பி டைப்-சி ஆடியோ
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers)
- அளவீட்டில் 165.7×76.3×8.09மிமீ
- எடையில் 204 கிராம்


Click it and Unblock the Notifications