Home
Mobile

பொளக்கும் பட்ஜெட்.. SONY கேமரா.. 120W சார்ஜிங்.. 5160mAh பேட்டரி.. 12GB ரேம்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் மிகப்பெரும் வரவேற்பு பெற்ற ஐக்யூ நியோ 9 ப்ரோ போனை போலவே கேமிங் மற்றும் கேமரா பிரியர்களை தட்டித்தூக்கும் அம்சங்களுடன் ஐக்யூ நியோ9எஸ் ப்ரோ (iQOO Neo9S Pro) போன் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த முழு விவரம் இதோ.

ஐக்யூ நியோ9எஸ் ப்ரோ அம்சங்கள் (iQOO Neo9S Pro Specifications): இந்த ஐக்யூவில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஓர்ஜின்ஓஎஸ் 4.0 (OriginOS 4.0) வருகிறது. மிட்-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் டைமன்சிட்டி 9300 பிளஸ் 4 என்எம் (Octa-Core Dimensity 9300+ 4nm) சிப்செட் வருகிறது.

பொளக்கும் பட்ஜெட்.. SONY கேமரா.. 120W சார்ஜிங்.. 5160mAh பேட்டரி போன்!

பக்கா கேமிங் அவுட்புட் கொடுக்கும் இம்மார்டலிஸ் ஜி720 ஜிபியு (Immortalis G720 GPU) கிராபிக்ஸ் வருகிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வெளியாகி இருக்கின்றன. 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் இருக்கிறது.

இந்த ஐக்யூ நியோ9எஸ் ப்ரோ போனில் பிரீமியம் டிஸ்பிளே அம்சங்கள் வருகின்றன. 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் (2800×1260 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

மேலும், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, 1.07 பில்லியன் கலர் டெப்த் மற்றும் பி3 கலர் காமட் சப்போர்ட் உள்ளது. இந்த போனில் விசிஎஸ் பயோனிக் (VCS Bionic) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது.

பொளக்கும் பட்ஜெட்.. SONY கேமரா.. 120W சார்ஜிங்.. 5160mAh பேட்டரி போன்!

இந்த மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்920 (Sony IMX920) சென்சார் மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி சப்போர்ட் வருகிறது. மேலும், ஆட்டோபோகஸ் (Autofocus), ஆன்டிஷேக் (Anti-shake), 20எக்ஸ் டிஜிட்டல் ஜூம் (Digital Zoom) மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங் (Video Recording) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இந்த ஐக்யூ நியோ9எஸ் ப்ரோவில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. பேட்டரி சிஸ்டம் மொத்த மார்கெட்டையும் மிரளவிட்டுள்ளது. 120W அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5160mAh பேட்டரி கொண்டிருக்கிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி போர்ட் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) சப்போர்ட் வருகிறது.

மிட்-பிரீமியம் போன்களில் வரும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio) சப்போர்ட் வருகிறது. லெதர், கிளாஸ் பேக் டிசைன் கொண்டிருக்கிறது.

இந்த ஐக்யூவில் ஒயிட் (White), ரெட் & ஒயிட் சோல் (Red & White Soul) மற்றும் ஃபைட்டிங் பிளாக் (Fighting Black) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.34,532ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.38,710ஆகவும் இருக்கிறது.

அதேபோல 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.42,230ஆகவும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி மாடலின் விலை ரூ.46,060ஆகவும் இருக்கிறது. சீனாவில் வெளியாகி அங்கு விற்பனையும் தொடங்கிவிட்டது. இந்தியாவில் விரைவில் வெளியகலாம். ஏற்கவே, நியோ 7 ப்ரோ இந்திய மார்கெட்டில் இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Neo9S Pro With 16GB RAM, 5160mAh Battery Sale Under Rs 35000 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X