Home
Mobile

வெச்சி செஞ்சிட்டாங்க.. OIS கேமரா.. 120W சார்ஜிங்.. 5500mAh பேட்டரி.. லெதர் பேனல்.. எந்த மாடல்?

பிரீமியம் லெதர் பேனல் மட்டுமல்லாமல், 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, பக்கா பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் மொபைல் சிப்செட் போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் ஐக்யூ நியோ9எஸ் ப்ரோ பிளஸ் (iQOO Neo9S Pro Plus) போன் வெளியாக இருக்கிறது. இந்த ஐக்யூ மாடலின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஐக்யூ நியோ9எஸ் ப்ரோ பிளஸ் அம்சங்கள் (iQOO Neo9S Pro Plus Specifications): இந்த ஐக்யூ போனில் 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

வெச்சி செஞ்சிட்டாங்க.. OIS கேமரா.. 120W சார்ஜிங்.. 5500mAh பேட்டரி!

மேலும், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொண்டிருக்கிறது. ஓர்ஜின்ஓஎஸ் 4.0 (OriginOS 4.0) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm Mobile) சிப்செட் வருகிறது. ஆகவே, இந்த ஐக்யூவில் மிட்-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம்.

அதேபோல மிட்-ரேஞ்ச் கேமிங் பர்பாமென்ஸ் கொடுக்கும் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போனில் 12 ஜிபி, 16 ஜிபி கொண்ட ரேம் மற்றும் 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி கொண்ட மெமரி வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இந்த நியோவிலும் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது.

ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. இந்த மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி வருகிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Ultrasonic Fingerprint Sensor) உள்ளது.

வெச்சி செஞ்சிட்டாங்க.. OIS கேமரா.. 120W சார்ஜிங்.. 5500mAh பேட்டரி!

மேலும், இன்பிராரெட் சென்சாரும் (Infrared Sensor) கொண்டிருக்கிறது. பேட்டரி சிஸ்டம் மிரளவிட்டுள்ளது. 120W அல்ட்ரா-ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5500mAh பேட்டரி வருகிறது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio) கொண்டிருக்கிறது.

இந்த ஐக்யூ நியோ9எஸ் ப்ரோ பிளஸ் போனில் IP65 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. இந்த ஐக்யூவொரு 5ஜி மாடலாகும். ஆகவே, 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டி வருகிறது. பிரீமியம் லெதர் பேனல் கொண்ட பஃப் ப்ளூ (Buff Blue) கலரில் இந்த ஐக்யூ வெளியாக இருக்கிறது.

இந்த பீச்சர்களில் சிப்செட், பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், கேமரா மற்றும் டிசைன் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகிவிட்டன. மற்ற பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துவை மட்டுமே. இந்த ஐக்யூ நியோ9எஸ் ப்ரோ பிளஸ் போனானது, வரும் ஜூலை 11ஆம் தேதி சீனாவில் வெளியாகிறது. அதன் பிறகு இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.

இந்த ஐக்யூ போனின் விலை விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், ரூ.35,000 முதல் ரூ.40,000 பட்ஜெட்டில் ஆரம்ப விலை இருக்குமென்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 120W சார்ஜிங், 5500mAh பேட்டரி, லெதர் பேனல் போன்ற பிரீமியம் பீச்சர்களுக்கு இந்த பட்ஜெட் கிட்டத்தட்ட வொர்த்தாகத்தான் இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Neo9S Pro Plus With 50MP Camera, 5500mAh Battery Launched on on July 11 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X