வெச்சி செஞ்சிட்டாங்க.. ரூ.34500 போதும்.. SONY கேமரா.. 120W சார்ஜிங்.. 5500mAh பேட்டரி.. 12GB ரேம்.. எந்த போன்?
144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, சாம்சங் சென்சார் கொண்ட செல்பீ ஷூட்டர், 120W அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி போன்ற பிரீமியம் பீச்சர்கள் மட்டுமல்லாமல், டூயல்-டோன் வேகன் லெதர் பேனல் கொண்ட ஐக்யூ நியோ9எஸ் பிளஸ் (iQOO Neo9S Pro Plus) போனானது, மிட்-ரேஞ்ச் செக்மெண்ட்டில் வெளியாகி மார்கெட்டை அதிரவிட்டுள்ளது. இந்த ஐக்யூ நியோ9எஸ் பிளஸ் போனின் முழு விவரங்கள் இதோ.
ஐக்யூ நியோ9எஸ் பிளஸ் அம்சங்கள் (iQOO Neo9S Pro Plus Specifications): இந்த ஐக்யூவில் 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) மற்றும் 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. பிரீமியமாக 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.

2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஓர்ஜின்ஓஎஸ் 14 (OriginOS 14) வருகிறது. மிட்-பிரீமியம் அவுட்புட் கொடுக்கும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
இந்த ஐக்யூ நியோ9எஸ் ப்ரோ பிளஸ் போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இதுபோக ஹை-எண்ட் வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.
ஆகவே, 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்டை ஆர்டர் செய்து கொள்ளலாம். விசிஎஸ் பயோனிக் (VCS Bionic) டெக்னாலஜி கொண்ட பிரீமியம் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) சப்போர்ட் வருகிறது.

ஆகவே, சோனி ஐஎம்எக்ஸ்921 (Sony IMX921) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + சாம்சங் எஸ்5கேஜேஎன்1 (Samsung S5KJN1) சென்சார் கொண்ட 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. அதேபோல சாம்சங் எஸ்5கே3பி9 (Samsung S5K3P9) சென்சார் கொண்ட 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.
பிரீமியம் சென்சார்கள் மற்றும் டெக்னாலஜிகள் வருவதால், கேமரா அவுட்புட் மிரளவிடும்படி இருக்கும். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Sspeakers), ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio) சப்போர்ட் உள்ளது.
120W அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5500mAh பேட்டரி வருகிறது. வேகன் லெதர் மற்றும் கிளாஸ் பேனல் டிசைன் கொண்டிருக்கிறது. ஆகவே லெதர் பேனலில் ஃபப் ப்ளூ (Buff Blue) கலரும், கிளாஸ் பேனலில் பிளாக் (Black) மற்றும் ஸ்டார் ஒயிட் (Star White) கலரும் விற்பனைக்கு வர இருக்கிறது.
இந்த ஐக்யூ நியோ9எஸ் பிளஸ் போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.34,500ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.39,115ஆகவும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.37,965ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.42,570ஆகவும் இருக்கிறது.
மேலும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.47,170ஆகவும் இருக்கிறது. சீனாவில் வெளியாகி இருக்கிறது. வரும் ஜூலை 16ஆம் தேதி அங்கு விற்பனை தொடங்குகிறது. அதற்கு பிறகு இந்திய உள்பட மற்ற நாடுகளில் வெளியாக இருக்கிறது. இந்தியாவில் ஐக்யூ மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








