லட்டு மாதிரி ஆஃபர்.. ரூ.10,000 கம்மி.. SONY கேமரா.. 5160mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. 8GB ரேம்.. எந்த மாடல்?
சோனி சென்சார் கேமரா, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 5160mAh பேட்டரி, அமோலெட் டிஸ்பிளே போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் ரூ.37,999 பட்ஜெட்டில் வெளியாகிய ஐக்யூ நியோ9 ப்ரோ (iQOO Neo9 Pro) போனானது இப்போது ரூ.10,000 விலை குறைப்பில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இதைவிட மலிவான விலைக்கு பிரீமியம் பீச்சர்களை வேறு எந்த மாடலும் கொடுக்காது. ஆகவே, முதலில் பீச்சர்களை பார்த்துவிட்டு விலை விவரங்களுக்கு செல்வோம்.
ஐக்யூ நியோ9 ப்ரோ அம்சங்கள் (iQOO Neo9 Pro Specifications): இந்த ஐக்யூவில் டாப்-எண்ட் பீச்சராக பேட்டரி இருக்கிறது. ஏனென்றால், 120W ஃபிளாஷ்-ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மட்டுமல்லாமல், பெரிய 5160mAh பேட்டரி கிடைக்கிறது. இதற்கு ஏற்ப விசி லிக்விட் கூலிங் சிஸ்டம் (VC Liquid Cooling System) வருகிறது. கேமிங் பிரியர்களுக்கு பிரீமியம் அவுட்புட் கிடைக்கும்.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் இருக்கிறது. வெட் டச் மற்றும் ஐ-கேர் சப்போர்ட் கொண்ட 6.78 இன்ச் (2800×1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த பிரீமியம் டிஸ்பிளேவில் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது.
மேலும், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கான 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5K ரெசொலூஷன் வருகிறது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+) பேக் செய்துள்ளது.
இந்த டிஸ்பிளேவுக்கு ஏற்ற பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் ஜென் 2 (Octa Core 4nm Snapdragon 8 Gen 2) சிப்செட் கிடைக்கிறது.
கேமிங் பிரியர்கள் அட்ரினோ 730 ஜிபியு கிராபிக்ஸ் கார்டுடன் அவுட்புட் எதிர்பார்க்கலாம். இந்த ஐக்யூ நியோ9 ப்ரோவில் ஆண்ட்ராய்டு 14 (Android 14 OS) பேஸ்டு ஃபன்டச் ஓஎஸ் 14 (FuntouchOS 14) கிடைக்கிறது. ஐக்யூ போன்களில் வழக்கமாக கிடைக்கும் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா பேக் செய்துள்ளது.
8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்920 (IMX920) சென்சார் கிடைக்கிறது. ஐக்யூவின் பிரத்யேக விசிஎஸ் பயோனிக் (VCS Bionic) சப்போர்ட் உள்ளது. வீடியோவுக்காக ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி பயன்படுத்தி கொள்ளலாம். 4K வீடியோ ஷூட் மற்றும் 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.
மேலும், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மட்டுமல்லாமல், இன்பிராரெட் சென்சாரும் (Infrared Sensor) கொடுத்துள்ளது. ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio) இருக்கிறது. கேமிங் சப்போர்ட் கொடுப்பதால், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.37,999ஆக இருந்தது.
இப்போது, அமேசான் தளத்தில் வெறும் ரூ.29,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலையிலும் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் மூலம் ரூ.2000 டிஸ்கவுண்ட் பெறலாம். ஆகவே, ரூ.10000 கம்மியான விலையில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ரூ.27,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். யல்-டோன் லெதர் பேனல் கொண்ட ரெட் மற்றும் பிளாக் கலர்கள் விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications








