வெச்சி செஞ்சிட்டாங்க.. 9000mAh பேட்டரி.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்.. SONY கேமரா.. எந்த மாடல்?
ஐக்யூ பிரியர்களை வெயிட்டிங் மோடில் வைத்திருக்கும்படியான பீச்சர்களுடன் ஐக்யூ நியோ12 (iQOO Neo12) ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மட்டுமல்லாமல், 9000mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது. முதலில் முழு பீச்சர்களை பார்த்துவிட்டு, விலை விற்பனை விவரங்களை செல்லலாம்.
ஐக்யூ நியோ12 அம்சங்கள் (iQOO Neo12 Specifications): 6.85 இன்ச் (3200 x 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 185Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. டிசிஐ பி3 கலர் காமட் கிடைக்கிறகது. 2200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.

டால்பி விஷன் (Dolby Vision) கொண்ட மாடலாக இருக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட மாடலாக இந்த ஐக்யூ நியோ12 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. கியூ3 கேமிங் சிப் (Q3 Gaming Chip) வருகிறது.
ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) பேஸ்டு ஓர்ஜின்ஓஎஸ் 7 (OriginOS 7) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்கின்றன. மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் கிடைக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட வழக்கமாக டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. மெயின் கேமராவுக்கு சோனி ஐஎம்எக்ஸ்921 (Sony IMX921) சென்சார் கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ கேமராவை இந்த ஐக்யூ நியோ12 ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.
இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Ultrasonic Fingerprint Sensor) சென்சாருடன் வருகிறது. மேலும், இன்பிராரெட் சென்சா் (Infrared Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டைப்-சி ஆடியோ கிடைக்கிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 9000mAh பேட்டரியை கொடுத்து இருக்கிறது.
IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.62,816ஆகவும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.68,528ஆகவும் இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.72,812ஆக இருக்கிறது.
மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.78,523 ஆக இருக்கிறது. சீனாவில் வெளியாகி இருக்கிறது. ஆகவே, யுவான் அடிப்படையில் இந்த விலைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் வெளியாகும்போது, இதே விலைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. பீச்சர்களிலும் பெரிதாக மாற்றம் இருக்கிறது.


Click it and Unblock the Notifications
