யாரு சாமி அவன்.. 9000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. புது iQOO ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?
அல்ட்ரா பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட மாடலாக ஐக்யூ நியோ12 (iQOO Neo12) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இப்போது, வெளியீட்டு தேதி மட்டுமல்லாமல், சிப்செட், பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட முக்கிய பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன. கலர் மற்றும் டிசைன் விவரங்களும் தெரியவந்துள்ளன.
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் ஐக்யூ ஸ்மார்ட்போன்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. இருப்பினும், புதிய மாடல்கள் சீனாவில் வெளியாகிய பிறகே இந்தியாவுக்கு வருவது வழக்கமாக இருக்கிறது. இதனால், சீனாவில் வெளியாகும்போதே அதன் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்ள எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

அந்த வரிசையில் ஐக்யூ நியோ12 ஸ்மார்ட்போன் வருகிற அக்டோபர் 28ஆம் தேதி சீனாவில் வெளியாக இருக்கிறது. ப்யர்ஸ் எட்ஜ் (Fierce Edge), ப்ரோஸ் பிளேட் ப்ளூ (Frost Blade Blue) மற்றும் ஷேடோ பிளாக் (Shadow Black) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இது சீனா மொழியில் இருந்து டிரான்ஸ்லேட் செய்யப்பட்ட கலர் விவரங்களாக இருக்கிறது.
ஐக்யூ நியோ12 அம்சங்கள் (iQOO Neo12 Specifications): 2K ரெசொலூஷன் கொண்ட ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 185Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 185 FPS கேமிங் அவுட்புட் கிடைக்க இருக்கிறது. 5000Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் டிஸ்பிளேவாக கிடைக்க உள்ளது.
இதில் 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic In-display Fingerprint Sensor) கொடுக்கப்பட இருக்கிறது. இந்த ஐக்யூ நியோ12 ஸ்மார்ட்போனானது, பிரீமியம் கேமிங் மடாலாக வெளியாக இருக்கிறது. ஆகவே, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Octa Core Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் கொடுக்கப்பட இருக்கிறது.
இதுபோக வழக்கமாக ஐக்யூ ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் கியூ3 கேமிங் சிப் (Q3 Gaming Chip) சிப்செட் கொடுக்கப்பட உள்ளது. பிரீமியம் பர்ஃபமென்ஸ் மற்றும் பிரீமியம் டிஸ்பிளே அவுட்புட்டுக்கு ஏற்ப அதிக பேக்கப் கொண்ட பேட்டரி சிஸ்டம் வர இருக்கிறது. ஆகவே, இந்த நியோ12 ஸ்மார்ட்போனில் 9000mAh பேட்டரி கொடுக்கப்பட் உள்ளது.
இந்த பேட்டரிக்கு 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. பெரிய பேட்டரி மற்றும் அதிக ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைப்பதால், பில்ட்-இன் கூலிங் ஃபேன் (Built-in Cooling Fan) கொண்ட மாடலாக கிடைக்க இருக்கிறது. லேட்டஸ்ட் பீச்சர்களுடன் ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) கொடுக்கப்பட இருக்கிறது. இந்த பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன.
எதிர்பார்க்கப்படும் பீச்சர்களை பொறுத்தவரையில், 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்ட மாடலாக இருக்க வாய்ப்புள்ளது. மெயின் கேமராவுக்கு வழக்கம் போல ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கொடுக்கப்பட வாய்ப்புள்ளது.
16 எம்பி செல்பீ ஷூட்டருடன் வெளியாகலாம். இந்த விவரங்கள் மட்டுமே தெரியவந்துள்ளன. கடந்த அக்டோபர் மாதம் வெளியாகிய ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.35,000 பட்ஜெட்டுக்குள் இருந்தது. ஆகவே, இந்த ஐக்யூ நியோ12 ஸ்மார்ட்போனுக்கு ரூ.40,000 முதல் ரூ.45,000 வரையில் ஆரம்ப விலை நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications
