மார்கெட்டே மிரளுது.. பட்ஜெட்ல SONY கேமரா.. 120W சார்ஜிங்.. 12GB ரேம்.. 6100mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஐக்யூ பிரியர்கள் மட்டுமில்லங்க, ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களும் பட்ஜெட்டை கேட்டால் மிரளும்படி ஐக்யூ நியோ10 (iQOO Neo10) போன் களமிறங்கி இருக்கிறது. அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 6100mAh பேட்டரி, 12 ஜிபி ரேம் போன்ற பக்கா பீச்சர்கள் மட்டுமல்லாமல், விதிஎஸ் பயோனிக், 100W பிடி ப்ரோட்டோகால் போன்ற டெக்னாலஜிகளையும் கொண்டிருக்கிறது. இந்த ஐக்யூ நியோ10 போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
கேமிங் மற்றும் ஓடிடி பிரியர்களுக்கு பேக்கப் கொடுக்கும் ஸ்மார்ட்போனை கொடுப்பதில் ஐக்யூ நிறுவனத்தை அடித்து கொள்ள முடியாது. மிட்-ரேஞ்ச் போன்களைவிட மலிவான விலைக்கு கிடைக்கும் மாடல்களிலேயே 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கை கொடுத்து பட்டையை கிளப்பி வருகிறது. இப்போது, ஐக்யூ நியோ10 மாடலை ஆட்டத்தில் களமிறக்கி இருக்கிறது.

ஐக்யூ நியோ10 அம்சங்கள் (iQOO Neo10 Specifications): இந்த நியோ10 மாடலில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm) சிப்செட் வருகிறது. இந்த சிப்செட் பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்க கூடியது. இருப்பினும், கேமிங் பிரியர்களுக்காக அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிடைக்கிறது.
இதுபோக பிரத்யேக கேமிங் சிப்செட்டாக கியூ2 (Q2) கிடைக்கிறது. கேமிங் என்ஹான்ஸ்மென்ட் பக்காவாக இருக்கும். மேலும், ஏஐ பீச்சர்களுடன் ஓர்ஜின்ஓஎஸ் 5.0 (OriginOS 5.0) கிடைக்கிறது. இந்த சிப்செட்களுக்கு ஏற்ப 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5K ரெசொலூஷனுடன் 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது.
இந்த பிரீமியம் டிஸ்பிளேவில் எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 4320Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. இந்த ஐக்யூ போனின் கேமரா வழக்கமாக டூயல் ரியர் செட்டப்பில் (Dual Rear Setup) இருக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்921 (Sony IMX921) சென்சார் மற்றும் விசிஎஸ் பயோனிக் (VCS Bionic) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.
மேலும், வீடியோவுக்காக ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவை கொடுக்கிறது. 20X டிஜிட்டல் ஜூமிங் இந்த கேமராவில் உள்ளது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் மற்றும் அல்ட்ரா சோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) கிடைக்கிறது.
பேட்டரி சிஸ்டமானது கேமிங் பிரியர்களுக்கு அட்டகாசமாக இருக்கும். 120W அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6100mAh பேட்டரி கிடைக்கிறது. ஹை-பை ஆடியோவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. ராலி ஆரஞ்ச் (Rally Orange), சீ குவாங் ஒயிட் (Chi Guang White) மற்றும் பிளாக் ஷேடோ (Black Shadow) கலர்களில் கிடைக்கிறது.
இந்த ஐக்யூ நியோ10 போனை 5 வேரியண்ட்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆகவே, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டை ரூ.28,025-க்கும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டை ரூ.32,690-க்கும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட்டை ரூ.30,355-க்கும் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.36,195-க்கும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட் ரூ.42,030-க்கும் கிடைக்கிறது. இப்போது, சீன நாட்டில் வெளியாகி இருக்கிறது. அந்த நாட்டில் விற்பனையும் தொடங்கிவிட்டது. இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications